அரசியலுக்கான பேச்சுத்தான்… அதில் உண்மையில்லை.. விஜயை கேலிக்கூத்தாக்கும் பிரபலம்

vijay
Vijay: விஜயின் பொதுக்குழு கூட்டமா அல்லது பாராட்டு விழாவா என்று தான் சமீபகாலமாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் பேசும் பொழுது படத்தில் பேசக்கூடிய வசனம் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து பேசுகிறவர்கள் எல்லாருமே விஜயை பாராட்டியே பேசுவது போல இருக்கிறது. இது ஒரு பாராட்டு விழா மாதிரி தான் இருக்கின்றது. இதையெல்லாம் பற்றி வரும் கமெண்ட்ஸை விஜயும் பார்ப்பார். அவருடைய அரசியல் நிலைப்பாடு அவருடைய எண்ணம் இதைப்பற்றி எப்படி இருக்கிறது என்பதற்கான கேள்விக்கு மிகவும் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.
அதாவது எந்த அரசியல் கூட்டம் தான் இப்படி பேசாமல் இருந்திருக்கிறது. திமுக பொதுக்குழு கூட்டம் வைக்கும் பொழுது ஸ்டாலினை பாராட்டாமல் இருப்பார்களா? ஜெயலலிதா இருக்கும்பொழுது அந்த கட்சிக்காரர்கள் பேசாமல் பாராட்டாமல் இருந்தார்களா? அதனால் எல்லாவற்றையும் நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அப்படி துதி பாடுகிற அரசியலை தான் நாமும் பார்த்து வருகிறோம். அடுத்து ஒரு மாற்று அரசியலை கொடுப்பேன் என யார் வந்தாலும் தனிமனித துதி என்பது தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கவே முடியாது. அது பதவிக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் தானாகவே அப்படி பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
தன்னை ஒருவர் துதி பாடுகிறார் என்றால் அதற்கு பின்னாடி ஒரு ஆதாயத்தை தேடுகிறார் என்ற எண்ணமெல்லாம் தலைவர்களுக்கு வரும். அப்பொழுதுதான் அந்த துதி பாடுவது ஒழியும். ஆனால் தலைவர்கள் அதை ரசிக்கிறார்கள். இன்னொரு விஷயம் என்னவெனில் இவ்வளவு பெரிய பொதுக்குழு கூட்டம் நடந்ததும் ஒரு மிகப்பெரிய இடத்தில் தான். இதைப் பற்றியும் விஜய் பேசும்போது இந்த மாதிரி கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு இடம் தரவில்லை என கூறினார். அதைப் பற்றியும் அந்தணன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது எழுத்துப்பூர்வமாக அப்படி எங்கேயும் விஜய் கொடுக்கவில்லை .
எங்கேயாவது அந்த சம்பவத்தை பதிவு பண்ணி காவல்துறை ஆணையருக்கு சென்னையில் மீட்டிங் போட போகிறேன், நேரு ஸ்டேடியத்தில் மீட்டிங் போட போகிறேன் என கடிதம் கொடுத்திருக்கிறீர்களா ?அதை வெளியிட்டு இருக்கிறீர்களா? நீங்கள் கேட்டதற்கு ஆதாரமே இல்லையே? அப்படி இருக்கும் பொழுது ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் கேட்டோம் மறுத்துவிட்டார்கள் என்று சொல்வதெல்லாம் அரசியலாக தான் பார்க்க முடிகிறது. அதற்கு பின்னணியில் உண்மை இருக்கிறதா என்பது தெரியவில்லை.
ஏதோ ஒரு அரசியல் பண்ணுவதற்காக தான் அவர் சொல்கிறார் என தோன்றுகிறது . இன்னொரு விஷயம் விஜய் தொடர்பாக ஒரு கூட்டம் நடக்கிறது என்றால் அங்கு பெரிய காமெடி தான் நடக்கிறது .இது அவருக்கு ஒரு பெரிய மைனஸ். இன்னொரு பத்து மீட்டிங் சிட்டியிலே நடந்தால் கூட விஜயை காண கூட்டம் குறையத்தான் செய்யும். ஏனெனில் புஸ்ஸீ ஆனந்த் பேசுவதாகட்டும். மேடையில் பேசுகிற மற்றவர்கள் ஆகட்டும். அனைவரும் பேசுவது ஒரு தெளிவான அரசியலை வைப்பதில்லை. மக்களுக்கு என்ன தேவை என்பதை பேசுங்கள் .

எவ்வளவு அறிவு பூர்வமாக இந்த அரசியலை நாங்கள் அணுகுகிறோம் என்பதை பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு மிகவும் முட்டாள்தனமாகவும் கேலியாகவும் அவர்கள் பேசுவது இருக்கிறது. விஜய் பேசுகிறார் ரசிக்கிறார் சிரிக்கிறார் என்பதற்காக அறிவற்ற விஷயங்களை பேசுவது இந்த கட்சி மீது இருக்கும் எண்ணத்தையே மக்கள் மத்தியில் மாற்றும். ஒரு பொதுக்குழு கூட்டத்தை உணர்வு பூர்வமாக மாற்ற வேண்டுமே தவிர கேலிக்கூத்தாக மாற்றக்கூடாது என அந்தணன் கூறி இருக்கிறார்.