Actor Vijay: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை விஜய் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு மாஸ் தான். ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக இதுவரை ஒரு ஹைப்பில் இருக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார் விஜய்.
இப்போது வரை அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய உச்சத்தில் தான் இருந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை நோக்கி பயணிக்க இருக்கிறார் விஜய். வருகிற சட்டமன்ற 2026 தேர்தலில் நேரடியாக களம் இறங்குகிறார் விஜய். அதுவரை அவர் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை எல்லாம் முடித்துவிட்டு சினிமாவிற்கு மொத்தமாக முழுக்கு போட இருக்கிறார்.
இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு விஜயின் அரசியல் பற்றி அவருடைய கருத்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதாவது விஜயின் அரசியல் என்பது வெளி எல்லையில் மட்டுமே தான் இருந்து கொண்டு வருகிறது. தண்ணீர் பந்தல், சுக்கு காபி, புத்தகங்கள் இதை மட்டும் கொடுத்தால் அது அரசியல் ஆகிவிடுமா?
இன்னும் அவர் எழுந்து வர வேண்டும். வாயை திறந்து பேச வேண்டும். முதலில் இப்போது இருக்கும் ஆளும் கட்சியை எதிர்த்து ஒரு அறிக்கை விட முடியுமா? அவரால் தைரியம் இருந்தால் விடச் சொல்லுங்கள். எதுவுமே பேசாமல் அரசியலில் எப்படி அவர் ஆதிக்கம் செலுத்தப் போகிறார் என தெரியவில்லை. இன்னும் அமைதியாகவே இருக்கிறார் என விஜய்யின் தற்போதைய அரசியல் பற்றிய அவருடைய சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார் செய்யாறுபாலு.
இதையும் படிங்க: நான் சிங்கிள் தான்… ஆனா? இன்ஸ்டாவில் ஓபனாக பேசிய ஸ்ருதிஹாசன்.. அப்பட்டமா பேசுறாங்களே…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…