என்னோட பெட்ரூம்ல இவர் போட்டோ மட்டும் தான் இருக்கும்...! வெளிப்படையாக கூறிய விஜய்..
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்ற பெயருக்கேற்றவாறு தன்னை செதுக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். இவர் நடித்த படங்கள் எல்லாமே திரைக்கு வருவதற்கு முன்பே ரசிகர்களுக்கு ஒரே தீபாவளி, பொங்கல் தான். அந்த அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளார்.
வெற்றியோ தோல்வியோ ரசிகர்கள் அதை பற்றிக் கவலை படாமல் என் தலைவன், என் தளபதி அவரை திரையில் பார்த்தாலே போதும் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரின் அப்பா பின்புலத்தில் இருந்து வந்தாலும் கூட ஒரு காலகட்டத்திற்கு மேல் இவரின் அயராது முயற்சி, தன்னம்பிக்கை இதன் மூலம் இந்த இடத்தை அடைந்தார்
என்றே சொல்லலாம்.
இதையும் படிங்கள் : டைட்டான டிரெஸ்ஸில் அது மட்டும் தூக்கலா இருக்கு!… இளசுகளை படுத்தும் தனுஷ் பட நடிகை…
இவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு லட்டுதான். படத்தின் உரையாடல்கள் கேக்குதோ இல்லையோ ரசிகர்களின் நெஞ்சார்ந்த விசில், கைத்தட்டல்கள் சத்தம் எப்போதுமே திரையரங்குகளில் இவரின் படத்தின் சமயம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்பேற்பட்ட ரசிகர்களை வைத்துள்ள விஜய் அவர்களும் ஒருவரின் தீவிர ரசிகர் என்பது அண்மையில் வெளிவந்த செய்தி மூலம் உண்மையாகியுள்ளது.
ஆமாம் இவரின் படுக்கையறையில் ஒருத்தர் போட்டோ மட்டும் எப்பொழுதும் இருக்குமாம்.அது வேறு யாருமில்லை.தலைவர் ரஜினியின் புகைப்படம் தான். அது விஜய் அவர்கள் சிறிய வயதில் இருக்கும் போது விஜயும் ரஜினியும் சேர்ந்து எடுத்த புகைப்படம். நிறைய மேடைகளில் விஜய் நான் ரஜினி ரசிகன் என சொல்லியிருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் எப்பேற்ப்பட்ட ரசிகன் என தெரியவந்துள்ளது.