சொன்னா கேக்குறாங்கேளா? விஜய் சொல்லியும் கேட்காத இயக்குனர்.. கடைசில விழுந்தது துண்டு

by Rohini |   ( Updated:2025-04-25 07:54:18  )
vijay (1)
X

vijay (1)

Vijay: ஒரு படம் வெற்றி தோல்வி யார் கையிலும் இல்லை. இந்தப் படம் மாபெரும் வெற்றியாகும் என நினைத்து இருக்கையில் யாரும் எதிர்பாராத ஒரு தோல்வியை அந்தப் படம் கொடுத்துவிடும்.அதற்கு சிறந்த உதாரணம் கங்குவா. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் நிச்சயமாக 2000 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்த்தனர் படக்குழு. ஆனால் போட்ட பணத்தையே எடுக்க மிகவும் கஷ்டப்பட்டனர் என்பதுதான் உண்மை.

ஆனால் சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக இருக்கும் அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்பது பற்றி ஒரு அறிவு எப்போதுமே இருக்கும். அதற்கேற்ப கதைகளில் சிறு சிறு திருத்தம் கூட சொல்வார்கள். அதைத்தான் நடிகர்களின் தலையீடு என்று மாற்றி விமர்சித்துவிடுவார்கள். ஆனால் அப்படி தலையீட்டால் சில படங்களின் தலையெழுத்தே மாறியிருக்கிறது.

அந்த வகையில் விஜயின் ஒரு படத்தில் விஜய் அந்த படத்தின் இயக்குனரிடம் இப்படி வேண்டாம். கொஞ்சம் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லியும் அந்த இயக்குனர் கேட்கவில்லையாம். கடைசியில் அந்தப் படம் தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. இதை பற்றி பிரபல சண்டை மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்ததாவது: விஜய் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான படம் பிரியமுடன்.

இந்தப் படத்தை வின்செண்ட் செல்வா இயக்கியிருப்பார். இதில் சண்டை மாஸ்டராக ஜாக்குவார் தங்கம் தான் பணியாற்றினாராம். ஒரு காட்சியிலயும் நடித்திருக்கிறாராம். இந்த படத்தை பற்றி கூறும் போது படம் நல்ல படம். ஆனால் சரியாக போகவில்லை. இருந்தாலும் 100 நாள்கள் ஓடியது. படத்தில் கடைசியில் தன் லவ்வரையே விஜய் விட்டுக் கொடுத்துவிடுவார். அதனால் தான் படம் சரியாக போகவில்லை.

இதை பற்றி நானும் விஜயும் இயக்குனரிடம் பேசி பார்த்தோம். ஆனால் அவர்தான் அப்படியே இருக்கட்டும் என சொல்லிவிட்டார் என ஜாக்குவார் தங்கம் கூறினார். ஆனால் இந்தப் படத்திற்காக விஜய் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்தாராம். 300 அடி பள்ளத்தில் விஜய் உருள வேண்டுமாம். எந்தவொரு டூப் போடாமல் அதை விஜய் செய்து முடித்தாராம். நல்ல நடிகர் விஜய் என ஜாக்குவார் தங்கம் கூறினார்.

Next Story