Connect with us

Cinema News

கொஞ்சம் அந்தாள பாத்து காத்துக்கோங்க.! விஜய் புதுபட தயாரிப்பாளரை புகழ்ந்து தள்ளும் திரையுலகம்.!

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இன்னும் ஒருமாத காலத்தில் அந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனை அடுத்து தளபதி விஜயை வைத்து அவரது 66ஆவது திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு/ இவர் தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்.

இவர் தெலுங்கு சினிமா உலகிற்கே தற்போது ஒரு பெரிய உதவியை செய்துள்ளார். ஆம், வழக்கமாக தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு நேரில் வருவதற்கு பதிலாக பலர் இணையத்தின் வாயிலாக டிக்கெட் நியூ (TicketNew), புக் மை ஷோ (BookMyShow) போன்ற தளங்கள் மூலமாக முன் பதிவு செய்வர். ஆனால் அதற்கு கட்டணமாக அந்த தளங்கள் சுமார் 25 முதல் 30 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும். இதனை கவனித்த தயாரிப்பாளர் தில் ராஜு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அண்மையில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான பீம்லா நாயக் எனும் திரைப்படத்தின் பெரும்பாலான ஏரியா வெளியீட்டு உரிமையை தில் ராஜூ கைப்பற்றினார். கைப்பற்றி விட்டு தியேட்டர்காரர்களுக்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அதாவது, டிக்கெட் புக் செய்வதற்கு பார்வையாளர்கள் தியேட்டருக்கு நேரில் வந்துதான் புக் செய்ய வேண்டும். மாறாக இணையத்தின் வாயிலாக புக் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்று அறிவிக்க வேண்டும் என்று தில் ராஜூ தியேட்டர்காரர்களுக்கு கண்டிஷன் போட்டார்.

இதனால் பதறிப்போன அந்த  முன்பதிவு செய்யும் தளங்கள், தில் ராஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால் சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு 25 முதல் 30 ரூபாய் கட்டணமாக செல்கிறது. இது மிகவும் அதிகம். ஆதலால் அதனை குறைத்தால் நாங்கள் எங்கள் படங்களை முன்பதிவு செய்யும் உரிமையை உங்களுக்கு தருகிறோம் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – விஸ்வரூபம் நான் இயக்க வேண்டிய படம்.! தனுஷால்தான் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாம்.! புலம்பிய இயக்குனர்.!

vijay

அதன் பின்னர் 25 ரூபாயிலிருந்து 18 ரூபாயாக இந்த கட்டணம் தற்போது ஆந்திரா, தெலுங்கானாவில் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களுக்கு கோடிக்கணக்கில் லாபம் தற்போது கிடைத்துள்ளது.

இதனை பார்த்த தமிழ் சினிமா தியேட்டர் காரர்கள் பெருமூச்சுவிட்டு வருகின்றனர்.  தில் ராஜு போல தில்லான நபர் நம்மில் யில்லை. அல்லது சங்கம் கூட இவ்வளவு தைரியமாக தமிழ் சினிமாவில் செயல்படவில்லை என்றும் அவர்கள் நொந்து கொள்கிறார்கள்.

அதான் தளபதியின் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தில் ராஜூ கால் பதிக்கிறார் அல்லவா விரைவில் இதேபோல் கட்டண குறைப்பு தமிழகத்திலும் வரும் என்று பொறுமையாக எதிர்பார்த்து காத்து இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top