விஜயை மிரட்டிய இயக்குனர்!..படப்பிடிப்பை விட்டு பயந்து ஓடிய நம்ம தளபதி.. ஆனா படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்..

vijay
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ரசிகர்களின் மானசீக தளபதியாக வலம் வரும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகிற பொங்கல் அன்று திரைக்கு வரவிருக்கிறது.
படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் அதிகமாகவே இருக்கிறது. காரணம் துணிவு படத்தோடு நேருக்கு நேராக மோதுவது, மற்றொன்று விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் தோல்வி இந்த இரண்டும் வாரிசு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

vijay1
ஒரு சாதாரண நடிகராக அறிமுகமாகி இன்று ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடக்கூடிய நடிகராக விஜய் மாறியிருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆரம்பத்தில் விஜயின் ஆல்பங்களை ஒவ்வொரு இயக்குனரிடம் காட்டி காட்டி வாய்ப்புகளுக்காக அலைந்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க : கே.எஸ்.ரவிக்குமாரின் கதையை அப்படியே சுட்டு பண்ன தனுஷ் படம்!.. என்னமா காப்பி அடிக்குறாங்க!…
வாய்ப்புகள் தேடி சென்ற இயக்குனர்கள் சில பேர் நீங்களும் ஒரு இயக்குனர் தானே? உங்கள் மகனை வைத்து ஏதாவது படம் பண்ணலாமே என்று கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு வந்த படங்கள் தான் ரசிகன் , மாணவன் போன்ற படங்கள். அதிலும் ரசிகன் படத்தாலும் விஜய் சில விமர்சனங்களுக்கு ஆளானார். அந்த படத்தில் மாமியாருக்கு முதுகில் சோப் போடுவது மாதிரியான காட்சியில் நடித்திருப்பார் விஜய். இதை விமர்சித்து பத்திரிக்கையில் செய்திகள் வெளியானது.

vijay sac
இதனால் நொந்து போன விஜய் சில சமயங்களில் அழுதுவிட்டாராம். அதன் பிறகு எஸ்.ஏ.சி சூப்பர் குட் பிலிம்ஸை அணுக விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் மூலம் விஜயின் நடிப்பு வெளியில் தெரிய ஆரம்பித்தது. இந்த படத்தின் வெற்றி விஜயை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வழி வகுத்தது.
எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.வெங்கடேசனிடம் என் பையனை வைத்து ஒரு பக்கா ஆக்ஷன் படம் ஒன்றை உருவாக்கி அவனை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காட்ட வேண்டும் என்று சந்திரசேகர் கூறியிருக்கிறார். அதன் பிறகு பகவதி படம் தயாரானது. அந்த படம் முழு ஆக்ஷன் படமாக அமைந்தது.

vijay3
அந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லனுக்கு சமமாக விஜயும் ஈடுகொடுக்க வேண்டும். சில சமயங்களில் விஜய்க்கு 4 டேக்குகள் வரை போனதாம். அதனால் இயக்குனர் விஜயிடம் தெலுங்கு படம் எதையும் பார்த்ததில்லையா? முதலில் போய் பாருங்கள் என்ற கூற படப்பிடிப்பை விட்டு விஜய் ஓடி விட்டாராம். பிறகு இயக்குனர் சந்திரசேகரிடம் சொல்ல வீட்டில் இருந்த விஜயிடம் இயக்குனர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என அறிவுரை வழங்கி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறதாம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியின் போது கூறினார்.