Connect with us
vijay

Cinema News

29 வருஷமா இல்ல உனக்கு 29 வயசா?!.. வைரலாகும் விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் தற்போது தளபதி விஜயாக மாறி 100 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் மாறியுள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை கடந்து விட்டது.

அவர் சினிமாவுக்கு வந்து 29 வருடங்கள் ஆகிவிட்டதை அவரின் ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இதற்காக சில காமன் டிபிக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விமர்சனங்களை தாண்டி மகுடம் சூட்டிக்கொண்டவர் விஜய் என்பது போல் சித்தரித்து உருவாக்கப்பட்ட டிபி பலரையும் கவர்ந்துள்ளது.

டிவிட்டரில் இதற்காக #29YearsOfVijayism மற்றும் #29YrsOfVIJAYSupremacy என்கிற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் அவர்காளாகவே பல விஜயின் புகைப்படங்களை டிசைன் செய்து காமன் டிபிக்களை உருவாக்கி வருகின்றனர்.

vijay

இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ஆற்றில் விஜய் படகில் நின்று கொண்டு செல்லும் போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து 29 வருஷம் இல்ல.. அவருக்கு வயசே 29 தான் என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top