தயாரிப்பாளருக்காக தன் சம்பளத்தையே குறைத்த விஜய்… இப்படி ஒரு நெருக்கமா??

by Arun Prasad |   ( Updated:2022-11-03 02:37:08  )
Master
X

Master

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் குஷ்பு, யோகிபாபு, சங்கீதா, பிரகாஷ் ராஜ், ஷாம், சரத்குமார், என பலரும் நடித்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Varisu

Varisu

எனினும் ரசிகர்கள் “வாரிசு” திரைப்படத்தை விடவும் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் “தளபதி 67” திரைப்படத்திற்குத்தான் மிகுந்த ஆவலோடு காத்திருப்பதாக தெரிய வருகிறது. இத்திரைப்படத்தை "மாஸ்டர்" படத்தை வெளியிட்ட எஸ்.எஸ்.லலித்குமார் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளிவருகிறது.

“தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படும் நிலையில் இத்திரைப்படம் குறித்த ஒரு அரிய தகவல் ஒன்றை பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.

Lokesh and Vijay

Lokesh and Vijay

அதாவது “ வாரிசு திரைப்படத்திற்காக விஜய் ரூ.130 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. ஆனால் தளபதி 67 திரைப்படத்திற்காக 5 கோடி குறைத்து ரூ.125 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம் விஜய்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் “லோகேஷ் கனகராஜ்ஜிற்கு தளபதி 67 திரைப்படத்திற்காக ரூ.25 கோடி சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் அவரும் ரூ.20 கோடியையே சம்பளமாக பெற்றுள்ளாராம்” எனவும் கூறியுள்ளார்.

Vijay

Vijay

“விஜய்யும் தயாரிப்பாளர் லலித்குமாரும் மிகவும் நெருக்கமானவர்கள். “மாஸ்டர்” திரைப்படம் கொரோனா காலத்தில் வெளியானபோது லலித்குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆதலால் அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக இவ்வாறு விஜய் சம்பளத்தை குறைத்துள்ளார்” என பத்திரிக்கையாளர் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story