
Cinema News
விஜய் ரிஜெக்ட் செய்த கதையில் நடித்து ஹிட் கொடுத்த நடிகர்…. இறுதியில் விஜய் சொன்ன வார்த்தை!
கோலிவுட் வசூல் மன்னன் மாஸ் நடிகர் என பல சாதனைகளை புரிந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் படங்கள் என்னதான் விமர்சனைங்களை சந்தித்தாலும் எப்படியாவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும். அதற்கு காரணம் விஜய் என்ற ஒற்றை மனிதர் தான்.
தற்போது மாஸ் நடிகராக வளர்ந்து விட்டதால் ஒவ்வொரு முறையும் தனக்கான கதையை விஜய் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் விஜய் பல நல்ல கதைகளை வேண்டாம் என கூறி மறுத்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளது.
அந்த வரிசையில் முக்கியமான படம் தான் சண்டைக்கோழி. ஆம் அதாவது சண்டக்கோழி படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி, முதலில் நடிகர் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் படத்தின் முதல் பாதியை மட்டும் கேட்ட விஜய், வேண்டாம் என கூறி மறுத்து விட்டாராம்.
அதன் பின்னரே அந்தக் கதையில் விஷால் நடித்து, சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒருநாள் விஜய்யை சந்தித்த லிங்குசாமி, அந்தக் கதையை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்களே என்று கூறி வருத்தப்பட்டாராம்.
அதற்கு விஜய் என்ன கூறினார் தெரியுமா? அதாவது, “அந்த கதைக்கு அந்த பையன் (விஷால்) தான் கரெக்ட்டான சாய்ஸ். திரையுலகிற்கு இப்படியொருவர் வரணும்னு இருக்கு” என்று கூறி புன்னகைத்து விட்டு சென்றாராம். நடிகர் விஷால் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.