More
Categories: Cinema News latest news

விஜய் நடிக்க மறுத்த மாஸ் ஹிட் திரைப்படங்கள்.. பேட் லக்ன்னு தான் சொல்லனும்…

ஒரு நடிகர் அவருக்கு வந்த கதையை மறுப்பதும் ஏற்பதும் அவரது விருப்பமே. ஆனால் ஒரு நடிகர் நிராகரித்த கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து அதுவும் அந்த திரைப்படம் மாஸ் ஹிட் ஆவது எல்லாம் அந்த கதையை நிராகரித்த நடிகருக்கு சோகத்தை அளிக்கத்தான் செய்யும். எனினும் சில நேரங்களில் அந்த நடிகர் நிராகரித்ததும் நல்லதே என்றும் கூட தோன்றலாம்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் இது வழக்கமாக நடப்பது தான். அதுவும் மாஸ் ஹீரோக்கள் நடிக்க மறுத்த கதையை வளர்ந்து வரும் ஹீரோக்கள் தேர்ந்தெடுத்து நடித்து ஹிட் ஆவதும் உண்டு. அந்த வகையில் தமிழின் முன்னணி நடிகரான விஜய் நடிக்க மறுத்த ஆனால் மாஸ் ஹிட் ஆன திரைப்படங்களை பார்க்கலாம்.

உன்னை நினைத்து

சூர்யா சிறந்த நடிகராக வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு வந்த கதை தான் “உன்னை நினைத்து”. இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சினேகா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் முதலில் விஜய்க்கு தான் சென்றிருக்கிறது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு சில காட்சிகளும் எடுத்திருக்கின்றனர். ஆனால் சில காரணங்களால் அவர் அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு தான் சூர்யாவிற்கு சென்றிருக்கிறது. எனினும் இத்திரைப்படம் சூர்யா கேரியரில் முக்கிய திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.

தூள்

தரணி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்ட படம் “தூள்”. விக்ரம் கேரியரில் ஒரு மெகா ஹிட் ஆக்சன் திரைப்படமாக அமைந்த “தூள்” திரைப்படத்தின் கதை முதலில் விஜய்க்கு தான் சென்றிருக்கிறது. விக்ரம் இத்திரைப்படத்திற்கு சிறப்பாக பொருந்தியிருந்தாலும் விஜய்க்கு இந்த கதை பக்கா பொருத்தமான கதைதான். எனினும் என்ன காரணத்தாலோ விஜய் இந்த கதையை மறுத்திருக்கிறார்.

ரன்

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் “ரன்”. மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு பக்கா ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தையும் விஜய் மறுத்திருக்கிறார்.

முதல்வன்

ஓரளவு இந்த செய்தி பரவலாக சினிமா ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஷங்கர் முதலில் ரஜினியை மனதில் வைத்து தான் “முதல்வன்” திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ஏனென்றால் ரஜினி அந்த சமயத்தில் அரசியலுக்குள் நுழைய உள்ளார் என பல செய்திகள் பரவி வந்தன. அந்த நேரத்தில் இத்திரைப்படம் ரஜினிக்கு தகுந்ததாக இருக்கும் என தோன்றியதாம். ஆனால் ரஜினி நடிக்க முடியாமல் போக இந்த கதை விஜய்யிடம் சென்றிருக்கிறது.

ஆனால் விஜய்யும் மறுத்திருக்கிறார். அதன் பின்பு தான் இந்த கதை அர்ஜூனிடம் சென்றிருக்கிறது. இப்போதும் அர்ஜூன் கேரியரில் முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது “முதல்வன்”. தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான கதைக்களத்துடன் வெளிவந்த இத்திரைப்படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது. இவ்வாறு தனக்கு வந்த பல ஹிட் திரைப்படங்களை ஏதோ ஒரு காரணத்தால் விஜய் தவறவிட்டிருக்கிறார்.

Published by
Arun Prasad

Recent Posts