விஜய் நோ சொன்ன பாடல்... ரஜினிகாந்திற்கு மாறி ஹிட்... அதுவும் காப்பி..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் போடப்பட்ட மெட்டு, இளையதளபதி விஜய் படத்திற்கு வேண்டாம் எனக் கூறப்பட்ட பாடல் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழில் சிலருக்கு போடப்படும் மெட்டுகள் வேறு சிலருக்கு பயன்படுத்தப்படுவது சாதாரணம் தான். அதில் சில பாடல்கள் மாற்றி பயன்படுத்தும் போது ஹிட்டாகவும் செய்யும்.
இதில் ஒன்று தான் ரஜினிகாந்தின் டாப் ஹிட் சந்திரமுகி பாடல். அதில், நயன் மற்றும் ரஜினி இணைந்து உருவான பாடல் கொஞ்ச நேரம். இந்த பாடல் ரஜினிக்கு முதலில் உருவாகியது இல்லை. விஜயின் மதுர படத்திற்காக உருவாகியதாம். அந்த பாடலை மதுர படத்தில் கண்டேன் கண்டேன் பாடலுக்கு மாற்றாக தான் எழுதினாராம்.
இதையும் படிங்க: ’சந்திரமுகி’ பட சூட்டிங்கில் கெத்து காட்டிய ஜோதிகா..! ரஜினி கையெடுத்து கும்பிட்ட சம்பவம்…
அது மதுர படத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி படத்தில் இந்த பாடலை காட்டி இருக்கிறார் கவிஞர் யுகபாரதி. அதனை பார்த்த பி.வாசுவிற்கு பாடல் பிடித்து விட்டது. ஆனால், இதில் எம்.ஜி.ஆரின் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடலில் அதிகமான சாராம்சங்கள் அடங்கி இருந்ததாம். அதை பி.வாசுவும் தெரிந்து தான் இருந்தார். அவரிடம் நான், ரஜினி சாருக்கு என்பதால் இதை மாற்றி கொண்டு வரவா எனக் கேட்டார்.
வாசு இல்லை வேண்டாம். இதுவே நல்லா இருக்கும் என்றார். ரெக்கார்டிங் சமயத்தில் மட்டும் இரண்டு வரிகள் மாற்றிக்கொள்ளலாம். அப்பாடலில் ஒரு சில வரிகளை மட்டுமே மாற்றினேன் என கவிஞர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.