ஆதாரத்தை வெளியிட்ட விஜய்... பல்பு வாங்கிய ஹேட்டர்ஸ்...!
கிராமப்புறங்களில் நன்கு காய்த்த மரம் தான் கல்லடி வாங்கும் என்ற பழமொழி ஒன்றை கூறுவார்கள். அதற்கு அர்த்தம் என்னவெனில் யார் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளாரோ அவரின் நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக சிலர் சில செயல்களில் ஈடுபடுவது உண்டு. அதை குறிக்கும் விதமாக தான் இவ்வாறு கூறுவார்கள்.
தற்போது நடிகர் விஜய் விஷயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. என்னதான் அவர் ஒரு பெரிய ஹீரோவாக இருந்தாலும் சிலர் விஜய் என்ன செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை அல்லது குற்றத்தை கண்டுபிடித்து அவரை பங்கம் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த முடிந்த தேர்தலில் பல பிரபலங்கள் வாக்களித்தனர். அப்படி தான் நடிகர் விஜய்யும் முதல் ஆளாக அவரின் வாக்கை பதிவு செய்தார். ஆனால் அதைவிட அவர் வந்த கார் மற்றும் அந்த காரின் இன்சூரன்ஸ் குறித்த தகவல்களை கலெக்ட் செய்வதில் தான் சிலர் கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் சிலர் விஜய் வந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தவில்லை எனவும், அந்த காரின் இன்சூரன்ஸ் காலவதியாகி விட்டது எனவும் இணையத்தில் வதந்திகளை பரப்பினார்கள். இதனால் பலரும் விஜய்யை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் இந்த வதந்திக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதன்படி விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு Own Damage இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளதாகவும், Third party insurance 2019ஆம் ஆண்டு மே மாதம் 29 முதல் 2022 ஆம் ஆண்டு மே 28 வரை உள்ளதாகவும் விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
முன்னதாக விஜய் காருக்கு வரி செலுத்தவில்லை என கூறப்பட்டபோது வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டேக்கை சிலர் டிரெண்ட் செய்தனர். தற்போது இன்சூரன்ஸ் முடிந்த காரில் விஜய் பயணம் செய்தார் என அவர் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு. அடுத்ததாக அவர் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என கூறினாலும் கூறுவார்கள்.