விஜயின் வேண்டுகோள்.! கண்டுகொள்ளுமா தயாரிப்பு நிறுவனம்.!

by Manikandan |
vijay-pooja hegde
X

விஜய் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கு - தமிழ் என இரு மொழி திரைப்படம் தயாராக உள்ளது. தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விரிவுபடுத்த தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் மற்றும் அங்குள்ள தயாரிப்பாளரோடு பயணிக்க உள்ளார் விஜய்.

இது விஜயின் 66வது திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜு தயாரிக்கிறார். இந்த திரைப்படதிற்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

மார்ச் மாதம் தொடங்கி 4 மாதங்கள் இப்பட ஷூட்டிங் நடைபெற உள்ளது. இப்படத்தை பொங்கல் தினத்திற்கு கொண்டு வர படக்குழு யோசித்து வருகிறதாம். ஆனால் விஜய்க்கு அதில் இஷ்டமில்லையாம். ஏனென்றால் வருடாவருடம் தீபாவளிக்கு விஜய் பட ரிலீஸ் ஆகிவிடும்.

இதையும் படியுங்களேன் - ரத்தாகும் வலிமை ரசிகர்கள் ஷோ.! கொலைவெறியில் அஜித் ரசிகர்கள்.!

அப்படி வெளியான மெர்சல், சர்க்கார், பிகில், என வரிசையாக வெளியானது. மாஸ்டர் கூட தீபாவளி ரிலீஸ் தான் பிளான் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக தான் பொங்கல் ரிலீசாக வெளியானது.

அதனால் , இந்த படத்தை சீக்கிரம் தயார் செய்து தீபாவளிக்கு வெளியிடுமாறு படக்குழுவுக்குவுக்கு கோரிக்கை வைத்துள்ளாராம். விஜயின் கோரிக்கையை ஏற்கும் படி சூழ்நிலைகள் அமையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story