அந்தரத்தில் தொங்கும் கதாநாயகி… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய விஜய்… ஷாக்கிங் சம்பவம்…

Published on: October 8, 2022
---Advertisement---

சினிமாவில் மிகவும் ரிஸ்க் எடுப்பது போன்ற சண்டைக்காட்சிகளை படமாக்கும்போது கதாநாயகர்களுக்கு பதிலாக சில ஃபைட்டர்களை பயன்படுத்தி டூப் போடுவது உண்டு. இதனால் டூப் போடுபவர்களுக்கு காயங்கள் ஏற்படுவது உண்டு. சில நேரங்களில் உயிர்போகும் அபாயமும் கூட உண்டு. இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் அபாயகரமான சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்துள்ளார் விஜய் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

1996 ஆம் ஆண்டு விஜய், சுவாதி, ரகுவரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “செல்வா”. இத்திரைப்படத்தை ஏ வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய் தீவிரவாதிகளிடம் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்றுவது போல் ஒரு காட்சி வரும்.

அதில் அப்பெண்ணை அருவியின் நடுவில் அந்தரத்தில் ஒரு கூண்டுக்குள் வைத்திருப்பார்கள். அந்த கூண்டு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறுந்துவிழும் தருவாயில் இருக்கும். இந்த நிலையில் விஜய் தீவிரவாதிகளை எல்லாம் கொன்றுவிட்டு ஒரு பாறையில் இருந்து தவ்வி, அந்த கூண்டில் இருக்கும் பெண்ணை காப்பாற்றுவார்.

இந்த காட்சியை குறித்து அத்திரைப்படத்தின் இயக்குனர் ஏ வெங்கடேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். அதில் “அருவிக்கு நடுவே கூண்டுக்குள் அடைப்பட்டிருக்கும் பெண்ணை விஜய் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். நான் விஜய்யிடம் டூப் போட்டுக்கொள்ளலாம் என கூறினேன். அதற்கு விஜய் ‘டூப் போடவேண்டாம். நானே செய்கிறேன்’ என கூறினார். நான் எனக்கு பயமாக இருக்கிறது என கூறினேன்.

அதற்கு விஜய் ‘டூப் போடுபவர்களுக்கு உரிய பாதுகாப்புதானே எனக்கும் இருக்கப்போகிறது. நான் இதனை செய்தால் நன்றாக இருக்கும். நானே செய்கிறேன்’ என்று விஜய் கூறினார். அப்படி எடுக்கப்பட்டது தான் அந்த காட்சி” என அச்சம்பவத்தை குறித்து  பகிர்ந்துகொண்டார். தனது உயிரையே பணயம் வைத்து விஜய் நடித்தது அவரின் அபரிமிதமான துணிச்சலை காட்டுகிறது. இவ்வாறு சினிமாவிற்காக ரிஸ்க் எடுத்ததினால்தான் அவர் பல இதயங்களில் தளபதியாக குடியிருக்கிறாரோ என்னவோ??

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.