தளபதி 66-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா?... ஸ்பெஷல் அப்டேட் இதோ...

by சிவா |
vaarisu
X

பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகும் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஏனெனில், பார்ப்பதற்கு விஜய் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தை தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் திரைப்படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் அப்ளிகேஷன் டிசைனராக நடிக்கவுள்ளார் எனவும், இப்படத்தில் விஜயின் பெயர் விஜய் ராஜேந்திரன் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் அடுத்த வருடம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story