நடிகர் விஜய் சென்னையில் உள்ள கொரட்டூரில் தனது அம்மா ஷோபா சந்திரசேகர் விருப்பத்திற்கு ஏற்ப சாய்பாபா கோயில் கட்டி இருக்கிறார். ஆனால், விஜய் கோயில் கட்டிய அந்த இடம் வில்லங்கமான இடம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தனது புதிய வீடியோவில் பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
உதயம் தியேட்டர் அருகில் இருந்த நடிகர் விஜயின் பல ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திய நிலையில், அதற்கு பதிலாக பணம் கொடுக்காமல் எஸ் ஏ சந்திரசேகர் மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் வைத்து கோரிக்கையின் பேரில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட இடம்தான் கொரட்டூரில் தற்போது விஜய் சாய்பாபா கோயில் கட்டியுள்ள இடம் என பிஸ்மி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மலையாள படங்களை புறக்கணிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்!.. ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டு!..
கொரட்டூரில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட இடம் 1969ம் ஆண்டு ஷெனாய் நகரை சேர்ந்த ரத்தின பாண்டியன் என்பவரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட இடம் தான். கொரட்டூரில் வளர்ச்சிக்காக அந்த இடம் ரத்தின பாண்டியன் என்பவரிடம் இருந்து பெறப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக அது எந்த பயன்பாடும் செய்யாமல் வைத்திருந்த அரசு, அதில் ஒரு பகுதியை தான் விஜய்க்கு கொடுத்திருப்பதாக கூறுகிறார்.
இதற்காக ரத்தின பாண்டியனின் மகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடியுள்ளார். ஆனால் இறுதியாக தீர்ப்பு விஜய்க்கு சாதகமாக வந்துவிட்டது. எப்படி இருந்தாலும் அந்த இடத்தில் ஃபிளாட் அல்லது வேறு எதைக் கட்டினாலும் எதிர்காலத்தில் வில்லங்கம் வர வாய்ப்பு உள்ளது என நினைத்து தான் நடிகர் விஜய் தனது தாய்க்காக சாய்பாபா கோயிலை அந்த இடத்தில் கட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் பட இயக்குனரிடம் சவால் விட்டு ஜெயித்த கோவை சரளா!.. சும்மா சொல்லி அடிச்சிருக்காங்களே!..
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள ஜோசப் விஜய் தற்போது சாய்பாபா கோயில் கட்டி இருப்பது இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காகத்தான் என்கிற குற்றச்சாட்டையும் பிஸ்மி வைத்துள்ளார்.
கொரட்டூரில் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு அவர்களுக்கு பணமும் அதற்கு பதில் நிலமோ கொடுத்திருக்க மாட்டார்களா? இது எப்படி வில்லங்கமான இடமாகும் என்கிற கேள்வியை பிஸ்மியை பார்த்து விஜய் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடைசியில இதுதான் மேட்டரா?!.. தனுஷ் – ஐஸ்வர்யா மொத்தமா ஏமாத்திட்டாங்களேப்பா!..
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…