எம்ஜிஆர் சந்தித்த பிரச்சினையை விஜயும் சந்திப்பாரா? ‘கோட்’ படத்தில் இருக்கும் இடியாப்ப பிரச்சினை

Published on: February 24, 2024
goat
---Advertisement---

GOAT Movie: விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டு வருகிறது கோட் திரைப்படம்.

இவர்களுடன் இணைந்து கோட் படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் கோட் படத்தை பற்றி சில முக்கிய தகவல்களை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: எங்க போனாலும் அண்ணனுக்கு தனி ப்ரோமோஷன் செய்றதுல அட்லீ கில்லி தான்.. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

அதாவது இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனே விஜய்தானாம். பிரசாந்தோ அல்லது மோகனோ இல்லையாம். பிரசாந்த் விஜயின் நண்பர் கதாபாத்திரத்திலும் மோகன் வேறொரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறாராம். அதனால் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதால் அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

மேலும் இந்தப் படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் 200 கோடி இல்லையாம். லியோவில் எவ்வளவு வாங்கினாரோ அதே சம்பளம் தான் என்றும் பயில்வான் கூறினார். ஏனெனில் அவர் அரசியலுக்கு செல்ல இருப்பதால் யாரெல்லாம் வந்து பார்ப்பார்கள்? அல்லது படத்தை பார்ப்பதற்கு கட்சியில் இருந்து எதாவது பிரச்சினை செய்வார்களா? இதனால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு சம்பளத்தை உயரத்தாமலேயே லியோவில் வாங்கிய சம்பளத்தை கொடுக்கிறோம் என்று சொன்னதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார்.

இதையும் படிங்க: ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு!.. எம்.ஜி.ஆரே பாராட்டிய சிவாஜி படம்!.. அதுவும் அந்த கிளைமேக்ஸ் சீன்!..

ஏனெனில் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் போது அவரின் அரசியல் வருகையால் அந்தப் படத்திற்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவு பிரச்சினையை கொடுத்தார்கள். இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வந்தார் எம்ஜிஆர். அதே போல் விஜயின் படத்தை சன் பிக்சர்ஸோ அல்லது ரெட் ஜெயண்டோ வெளியிடாது. மூன்றாவது பார்ட்டிதான் வெளியிடும்.

அதனால் எங்கு இருந்தாவது பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் FMSம் லியோவுக்கு எவ்வளவு தொகையில் உரிமையை கொடுத்தோமோ அதே விலைக்குத்தான் இந்தப் படத்திற்கும் கொடுப்போம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக பயில்வான் ரெங்கநாதன் கூறினார். அதனால் படம் ரிலீஸ் ஆகும் போதுதான் என்ன நிலவரம் என தெரியும்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரின் முதல் காதல்!.. ரஜினி நடிகராவதற்கு காரணமே அவங்கதானாம்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.