யாரு சொன்னா? விஜய் - சங்கீதா லவ் மேரேஜ்னு?.. உண்மையை போட்டுடைத்த ஷோபா!..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக டிரெண்டிங்கான விஷயம் என்றால் விஜய் சங்கீதாவை விவாகரத்து பண்ணப் போகிறாரா? என்ற செய்தி தான். சும்மா ஒரு டிரிப் போனாலே இதனால் தான் அவர்களுக்குள் பிரச்சினை என்ற பல வதந்திகள் பரவி வருகின்றன.
ஒரு பக்கம் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இருக்கும் நெருக்கம் தான் இவர்களின் பிரச்சினைக்கு காரணம் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் அதை பற்றி விஜய் தரப்பில் இருந்தோ சங்கீதாவின் தரப்பில் இருந்தோ எந்த ஒரு செய்தியும் வரவில்லை.
அப்படி இருக்க நேற்று விஜயின் அம்மா ஷோபா ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டில் ஒன்றில் விஜயை பற்றியும் சங்கீதாவை பற்றியும் கூறியிருந்தார். தன் பேரப்பிள்ளைகளை எந்த ஒரு அம்மாவும் இப்படி பார்க்கமாட்டார்கள், அந்த அளவுக்கு சங்கீதா எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யக்கூடியவர் என்று கூறினார்.
அந்த வகையில் விஜயின் பசங்க மிகவும் லக்கியான பசங்க என்று கூறினார். மேலும் எப்படி தமிழ் நாட்டில் கிடைக்காத பெண்களா? லண்டனில் இருந்து கூட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? என விஜய் சங்கீதா கல்யாணம் பற்றி கேட்டபோது,
விஜயை பார்க்க 1996 ஆம் ஆண்டு சங்கீதாவும் அவரது சகோதரியான தீபாவும் விஜயின் வீட்டிற்கே வந்து விட்டார்களாம். அப்போது கேட்டில் இருந்தவர் விஜய் சூட்டிங் போயிருக்கிறார் என்று சொன்னதும் நேராக விஜயை பார்க்க சூட்டிங்கே போய்விட்டார்களாம்.
அப்போது விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். இவர்களை பார்த்ததும் விஜய் பேசிவிட்டு வீட்டில் போய் பாருங்கள் என்று தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தாராம். அதன் பின் அந்த பழக்கத்தினால் 1997 ஆம் ஆண்டு மீண்டும் வீட்டிற்கு வந்து போக இருந்தாராம்.
சங்கீதாவை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். அதன் பிறகு தான் நாங்கள் எல்லாரும் சொல்லி இந்த கல்யாணம் நடந்துச்சு , எல்லாம் கடவுளின் சித்தம் என்று ஷோபா கூறினார்.