விஜய் தனியா தம் அடிக்க போவார்... நான் தான் company...! பளிச்சின்னு காட்டிய கேமராமேன்..

by Rohini |
vijay_main_cine
X

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் பணிபுரிந்தவர் விஜய் மில்டன். இவர் முதலில் நடிகர் பரத் மற்றும் மல்லிகா கபூரை வைத்து காதல் கலந்த காமெடி படமான “ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது” என்ற படத்தை இயக்கினார். ஆனால் படம் சொல்லும் படியாக இல்லை.

vijay1_cine

அதன் பின் காதல் ,வழக்கு எண் 18/9 , கோலி சோடா, மற்றும் கடுகு ஆகிய படங்களில் இவரது ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றது. கோலி சோடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் மில்டன் விக்ரம் மற்றும் சமந்தா நடித்த 10 எண்றதுக்குள்ள என்ற படத்தை இயக்கினார்.

இதையும் படிங்கள் : அசால்டாக அதிரடி காட்டிய இளம் நடிகை… கலக்கத்தில் ரசிகர்கள்!!

இந்த படம் மூலம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். பின்னர் அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் புரொடக்‌ஷனுடன் கோலி சோடா 2 படத்தை இயக்கினார். 2020 இல் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக தனது அடுத்த முயற்சியை கன்னட சூப்பர்ஸ்டார் சிவ ராஜ்குமாருடன் கைகோர்த்து, கன்னட திரைப்படத் துறையில் தனது முதல் இயக்குனர் பணியை ஆரம்பித்தார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழ் படத்தை இயக்க உள்ளார்.

vijay2_cine

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பெரும்பாலான படங்களில் இவரே ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்த அவர் அதன் மூலம் நானும் விஜய்யும் மிகவும் நெருக்கமான நண்பர்களானோம். சொல்லப்போனால் சூட்டிங் நேரத்தில் விஜய் தனியாக தம் அடிக்க போவார். அவருக்கு நான் தான் கம்பெனிக்கு போவேன். வெளியில் நிற்பேன். அவர் க்ளோஸ் பிரண்ட்ஸ் 4 பேர் வந்தால் சூட்டிங்கில் அவர்களுடன் தான் பேசுவார். ஹீரோயின் கூட விஜய் பேசமாட்டார். அமைதியாக இருப்பார். ஆனால் தற்பொழுது ரொம்பவும் மாறிவிட்டார் என விஜய் மில்டன் கூறினார்.

Next Story