முன்னாடியே உஷார் ஆன மிஸ்கின்.. தெரியாம மாட்டிக்கிட்ட விஜய் சேதுபதி.. என்ன நடக்கப் போதோ..?
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் எதார்த்த படங்களாக இருக்கும். இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வேறு ஒரு கோணத்தில் அவரது படைப்புகள் காணப்படும். அவரது படங்கள் எப்படி தனித்துவமாக காணப்படுகிறதோ அதேபோல அவரின் தோற்றமும் காணப்படும். இதேபோல தனித்துவமான நடிப்பை லியோ படத்திலும் வெளிப்படுத்தி இருப்பார்.
தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது வில்லன் நடிகராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். விஜய்,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் இயக்குனராக அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். இம்முறை இவரின் படத்திற்கு கதாநாயகனாக விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்க உள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் அறிமுக விழாவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ட்ரெயின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் இனிமேல் தான் வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவே நடித்து வந்தால் ரசிகர்கள் என்னை இனி வில்லனாகதான் பார்ப்பார்கள். அதனால் இனி அப்படி நடிக்கப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் மிஷ்கின் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மிஷ்கினும் இயக்குனராக களம் இறங்க உள்ள நிலையில் இதற்கு முன் சம்பளப் பிரச்சனை காரணமாகவே பல தயாரிப்பு நிறுவனங்களுடன் இவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் சம்பளமாக எட்டு கோடி மிஷ்கின் கேட்டுள்ளார்.
அதில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே நான்கு கோடி முன்பனமாகவும் பெற்றுக் கொண்டுள்ளார். திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பே சம்பள விசியத்தில் இவ்வளவு கரார் காட்டும் மிஷ்கின் படத்தை சொன்ன தேதியில் முடித்துக் கொடுப்பாரா அல்லது தயாரிப்பாளரின் தன் தலையில் துண்டை போட்டு விடுவாரா என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.