Vijay Serial: ராதிகாவிடம் சிக்கிய கோபி… விஜயாவுக்கு கிடைத்த பெத்த தொகை… பாண்டியன் திடீர் மாற்றம்..
Vijay Serial: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மூன்று தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்பு.
சிறகடிக்க ஆசை: சீதாவுக்கு பார்த்த மாப்பிள்ளை அவரை வேண்டாம் எனக் கூறிவிட நல்லதுக்கு தான் என அம்மாவை சமாதானம் செய்கிறார். பின்னர் கேஸ் பிரச்னைக்கு காசு வேண்டும் எனக் கூற முத்து தன்னுடைய நண்பர்கள் மூலம் பணம் திரட்டுகிறார். இந்திரா தன்னுடைய கணவர் மெஷினை விற்க முத்து மறுத்து விடுகிறார்.
முடிந்த அளவு பணத்தை திரட்டி கொண்டு வக்கீலிடம் கொடுக்க அவர் விஜயாவை பற்றி விசாரிக்க சொல்லிவிட்டு அவரை பார்வதி வீட்டில் நேராக சென்று பேசுகிறார். இதனால் உங்களுக்கு காசு கிடைக்கும் எனக் கூற அவரும் 2 லட்சத்துக்கு ஓகே சொல்கிறார்.
இதையும் படிங்க: Tamannah: பாலிவுட் இல்ல…! டைரக்ட்டா ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தமன்னா… ஸ்டைலிஷ் லுக்!…
பாக்கியலட்சுமி: பாக்கியா ரெஸ்டாரெண்டில் ஈஸ்வரி வேலை செய்துக்கொண்டு இருக்க அவரை அமரக்கூறி டீயை கொடுக்கிறார். பின்னர் விழா முடிந்து செழியன், ஜெனி, இனியா காரில் செல்லும்போது எழில் குறித்து பெருமையாக பேசிக்கொண்டு வருகின்றனர். பாக்கியா வராததை நினைத்து கடுப்பாகின்றனர்.
ஜெனி பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேச இனியா மற்றும் செழியன் அவங்களுக்கு எங்க மேல பாசம் இல்லை. பிசினஸுனு அழைஞ்சிட்டு இருக்காங்க என்கின்றனர். கோபி சந்தோஷமாக இருக்க பாக்கியா பெயரை படத்துக்கு வச்சிருப்பது குறித்து கேட்கிறார் ராதிகா.
அதையெல்லாம் மாத்திக்கலாம் எனக் கூற பங்ஷனுக்கு தயாரிப்பாளர் மூலம் பாக்கியாவை வர விடாமல் செய்ததை சொல்லிவிடுகிறார். இது எங்க அப்பாக்கு என்னை கடைசி காரியம் செய்யவிடாமல் செய்ததுக்கு என்கிறார். ராதிகா கோபமாகிவிடுகிறார். எழில் அமிர்தாவிடம் நடந்த உண்மையை கூற அவர் இந்த வாய்ப்பை நீங்க உதறி இருக்கணும் எனக் கூறிவிடுகிறார்.
இதையும் படிங்க: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை
கால் செய்து சரவணன் தங்கமயிலிடம் பேசுகிறார். வீட்டிற்கு வரும் பாண்டியன் குடும்பத்தினரை அழைத்து ராஜி டியூஷன் எடுக்க சம்மதம் சொல்லிவிடுகிறார். ஆனால் படிப்பை முடிக்கும் வரை மட்டுமே இதை செய்யலாம் என்கிறார். ராஜி மிகப்பெரிய சந்தோஷத்துக்கு ஆளாகிறார். கதிர் அவருக்கு ஆறுதலாக இருக்கிறார்.