Vijay Serials: பாக்கியாவின் அடுத்த ஆர்டர்… பிடிவாதமாக இருக்கும் விஜயா… பாண்டியனிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ராஜி..

by Akhilan |   ( Updated:2024-11-11 06:55:53  )
Vijay Serials: பாக்கியாவின் அடுத்த ஆர்டர்… பிடிவாதமாக இருக்கும் விஜயா… பாண்டியனிடம் சரமாரியாக கேள்வி கேட்ட ராஜி..
X

Vijay serials

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களின் இன்றைய எபிசோடுகளின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: விஜயாவை பார்க்க அண்ணாமலை வந்து சத்யாவின் கேசை வாபஸ் வாங்க கூறுகிறார். ஆனால் விஜயா பிடிவாதமாக இருந்து விடுகிறார். ஒரு கட்டத்தில் நான் கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் மீனா வெளியில் செல்ல வேண்டும் என்கிறார். அப்போ முத்து என அண்ணாமலை கேட்க அவனும் வெளியில் போகட்டும் எனக் குறிப்பிடுகிறார்.

மீனா வந்ததிலிருந்து தான் முத்து சரியாக இருக்கான் அது நடக்காது என கூறி விடுகிறார். அப்போ நானும் கேசை வாபஸ் வாங்க மாட்டேன் என விஜயா கூறி விடுகிறார். இதனால் அவரை திட்டி விட்டு அண்ணாமலை சென்று விடுகிறார். மனோஜ் மற்றும் ரோகினி விஜயாவை பார்க்க வருகின்றனர். வீட்டில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் மீனாவிடம் மன்னிப்பு கேட்கின்றனர். வீட்டிற்கு வரும் அண்ணாமலை விஜயா கூறியதை சொல்லிவிடுகிறார்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ‘ஸாரி’ கேக்க முடியாது… விஜய் சேதுபதியை எதிர்த்த போட்டியாளர்?

வக்கீலிடம் பேச அவரோ 5 லட்சம் பணம் தயார் செய்யுங்கள். பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிடுகிறார். இதில் அதிர்ச்சியாகும் முத்து மற்றும் மீனா வெளியில் வர சீதாவிற்கு பெண் பார்த்த இடத்தில் அதை வேண்டாம் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் சீதா எனக்கே இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என அவருடைய அம்மாவை சமாதானம் செய்கிறார்.

பாக்கியலட்சுமி: பங்க்ஷன் முடிந்த பின்னர் எழில் கவலையாக இருக்க கோபி நீ நினைச்சது தான் சாதிச்சிட்டியே அப்புறம் எதுக்கு இப்படி இருக்க என்கிறார். உங்க அம்மா பெயரை படத்துக்கு வச்சுட்ட. செஞ்சதெல்லாம் நான் ஆனா நீங்க சப்போர்ட் பண்றதுக்கு உங்க அம்மா தான் என்கிறார். இதுக்கு பின்னாடி நீங்க தான் இருக்கீங்கன்னு தெரிஞ்சா நான் இதற்கு ஒத்துக்கவே மாட்டேன் என எழில் கூறுகிறார்.

வீட்டிற்கு வரும் பாக்கியா பங்க்ஷனிற்கு செல்லவில்லை என ஈஸ்வரியிடம் கூறிவிட்டு அவரை வலுக்கட்டாயமாக ரெஸ்டாரண்டிற்கு அழைத்து வருகிறார். ஆயுத பூஜை பேக்கிங் நடந்து கொண்டிருக்கிறது. செல்வியிடம் எழில் கூறிய விஷயத்தை கூறி பாக்கியா அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: Vijay Jyothika: ஜோதிகாவை இப்படியெல்லாம் கிண்டலடிச்சிருக்காரா விஜய்? சீக்ரெட்டை போட்டுடைத்த டான்ஸ் மாஸ்டர்

பாண்டியன் ஸ்டோர்ஸ்2: ராஜி டியூஷன் எடுக்க வேண்டும் என பாண்டியனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரும் அதெல்லாம் வேண்டாம் என பேச தன்னுடைய நிலையை எடுத்துக் கூறி விடுகிறார் ராஜி. இருந்தும் பாண்டியன் கிளம்பி கடைக்கு சென்று விடுகிறார்.

கதிர் ராஜியிடம் நீ பேசியதில் எந்த தப்பும் இல்லை என அவரை சமாதானம் செய்கிறார். தங்கமயில் தம்பி ஆதரவு உனக்கு தான் இருக்கு என பேசுகிறார். சரவணன் கிளம்பும்போது தங்க மயிலை கொஞ்சி விட்டு செல்ல அவர் அமைதியாக இருக்கிறார். கடையில் பாண்டியன் தன்னுடைய மருமகள்கள் குறித்து பழனியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Next Story