கேஸை வாபஸ் வாங்கிய விஜயா… வசமாக சிக்கிய கோபி.. ராஜியால் சிக்கலில் தங்கமயில்

Published on: November 13, 2024
Vijay serials
---Advertisement---

Vijay Serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களின் இன்றைய எபிசோட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை: விஜயாவை சென்று நேரில் சந்திக்கும் வக்கீல் அவனை ஜெயிலுக்கு அனுப்புவதில் உங்களுக்கு என்ன லாபம் இருக்கிறது பணம் வாங்கி தருகிறேன் என சமாதானம் பேசுகிறார். விஜயாவும் அதற்கு ஒத்துழைத்து இரண்டு லட்சம் கேட்க வக்கீலும் உடனே ஒப்புக்கொள்கிறார். இதை தொடர்ந்து விஜயா அந்த கேஸை வாபஸ் வாங்கி விடுகிறார்.

இந்த விஷயத்தை வக்கீல் முத்துக்கு கால் செய்து கூற அவர் சந்தோஷம் கொண்டு வீட்டினரிடம் பகிர்ந்து கொள்கிறார். இதை கேட்கும் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மீனாவின் அம்மா மற்றும் தங்கைக்கு இந்த விஷயத்தை கூறி சத்யாவை அழைத்து வருகின்றனர். அவருக்கு முத்து அறிவுரை கூறுகிறார். ரோகிணி வித்யாவிடம் இது எப்படி நடந்தது என புலம்பி கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: அடம்பிடிச்ச எஸ்.ஜே.சூர்யா… அதுக்கு சம்மதித்த தேவயானி…! அவரே சொல்லிட்டாரே..!

பாக்கியலட்சுமி: வேலை அனைத்தையும் முடித்துவிட்டு எல்லோரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பாக்யா மனக்கவலையில் அமர்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் செஃப்விற்கு கோபிநாத் கால் செய்கிறார். உடனே அங்கு வரும் பாக்கியா அவரை ஸ்பீக்கரில் போட்டு பேச கூறுகிறார்.

அப்பொழுது பேசும்போது பிரியாணி ஆர்டரில் சிக்கனை கலந்து பாக்கியாவை மாட்டி விட்டது போல இப்பொழுதும் என்ன செய்திருக்கிறீர்கள் என கேட்கிறார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். எதுவும் சொல்லாமல் சமாளித்து போனை வைத்து விடுகிறார். இதைக் கேட்கும் செல்வி அவரை போட்டு அடிக்கிறார்.

அவரை சமாதானம் செய்யும் பாக்கியா இந்த விஷயம் தெரிந்ததுதான் இவரை அழைத்து வந்தேன். செஃப் வீட்டில் நடந்த விஷயங்களை செல்வியிடம் கூறுகிறார். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்களை பார்த்துக் சொல்லிவிட்டு பாக்கியா ரெஸ்டாரண்டில் இருந்து கிளம்புகிறார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு இது கியாரண்டி… புது போஸ்டர் சொல்லும் ரகசியம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: ராஜி டியூஷன் எடுக்க பாண்டியன் ஒப்புக்கொண்டதால் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கின்றனர்.  செந்தில் மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தங்க மயிலிடம் சரவணன் வந்து பேசிக் கொண்டிருக்க அவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தங்கமயில் பின்னர் அவருடைய அம்மாவிற்கு கால் செய்து ராஜி டியூஷன் அனுமதி வாங்கிய விஷயத்தை கூறுகிறார். என்னையும் வேலைக்கு போக சொல்கிறார்கள். எனக்கு ஒரு தான் எம் ஏ படிக்காத விஷயம் தெரிந்து விடும் என பயப்படுகிறார். கோமதி மற்றும் அவருடைய அம்மா சிக்னலில் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது சக்திவேல் வந்து சத்தம் போட ராஜி அவருக்கு எதிராக சண்டைக்கு நிற்கிறார்.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.