உன் மூஞ்சிய போட்டா யார் தியேட்டருக்கு வருவாங்க.?! விஜய் சேதுபதியை கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்.!?
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி என்று மற் மொழி திரைப்படங்களிலும் தன்னை திறமையான நடிகனாக காட்டி வருகிறார்.
அவர் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைபடங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல அனுபவங்களை விஜய் சேதுபதி கண்டுள்ளார். அந்த அனுபவங்களை கொண்டு தான், தற்போது தமிழ் சினிமாவில் தெளிவாக அடுத்தடுத்த நகர்வுகள் எடுத்து வைத்து கவனமாக பேசியும் வருகிறார் விஜய் சேத்துப்பதி. விஜய் சேதுபதிதான் பேச்சில் நிதானம் அந்தளவுக்கு இருக்கும்.
அவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படம் ஒன்று ரிலீசாகாமல் தத்தளித்து வந்துள்ளது. அந்த சமயம் ஓர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்று உதவி கேட்டுள்ளார். அவர் சிறிய திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு சிறிய படக்குழுவுக்கு உதவியும் செய்வார். அவரிடம் சென்று விஜய்சேதுபதி உதவி கேட்டுள்ளார்.
விஜய் சேதுபதியும், தயாரிப்பாளரும் பேசியுள்ளனர். அப்போது உன் முகத்தை எல்லாம் போஸ்டர்களில் ஒட்டினால் தியேட்டருக்குள் யார் வருவார்கள் என்று பேசி விஜய்சேதுபதியை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிவிட்டாராம் அந்த தயாரிப்பாளர்.
இதையும் படியுங்களேன் - ஆளே இல்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடித்து விளையாடும் யோகி பாபு.! எங்ககிட்டையும் அது இருக்கு.!
இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் தற்போது வரை அந்த பிரபல தயாரிப்பாளருக்கு விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுக்கவில்லையாம். அப்படி அந்த தயாரிப்பாளரும் விஜய் சேதுபதி கால் சீட் கேட்கமாட்டார். அப்படியே கேட்டாலும் விஜய் சேதுபதி கண்டிப்பாக கொடுக்க மாட்டார் என்கிறது திரையுலகம்.
தற்போது சொல்ல போவதற்கும் மேலுள்ள செய்திகும் சம்பந்தம் கிடையாது. தற்போது வரை விஜய் சேதுபதியை வைத்து தயாரிக்காத தயாரிப்பாளர் என்றால் அது கலைப்புலி தாணு தான். அவர் பிரபல தயாரிப்பாளராக இருந்தாலும், பல முன்னணி கதாநாயகர்கள் படத்தை தயாரித்து வந்தாலும், பல சிறிய பட்ஜெட் திரைப்படங்களை வெளியீடு செய்வதில் பெரும் உதவிகரமாக இருந்துள்ளார். அப்படி இருந்தும் தற்போதுவரை விஜய் சேதுபதி திரைப் படங்களை அவர் தயாரித்ததும் இல்லை, அவர் வினியோகம் செய்ததும் இல்லை இதனை வைத்துக்கொண்டு நெட்டிசன்கள் இணையத்தில் இவராக கூட இருக்கக்கூடும் என்று கிசுகிசுத்து வருகின்றனர். ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்று தற்போது வரை வெளியில் தெரியவில்லை.