தெரியாத்தனமா சினிமாவுக்குள்ள வந்துட்டேன்.! திட்டமிட்டு ஏதும் செய்யல.! உருகுலைந்த விஜய் சேதுபதி.!

Published on: April 17, 2022
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர்கள் ஒரு சிலரே. அப்படி வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் . அப்படித்தான் பலர் தமிழ் சினிமாவுக்குள் வந்துள்ளனர் திரைத்துறையில் ஜெய்த்தும் உள்ளனர் .

vijay sethupathi

அப்படி ஜெயித்தவர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய்சேதுபதி, இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்தார் . ஏன், ஒரு சீரியலில் கூட அவர் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஏழு வருடங்கள் கழித்துதான் கதாநாயகன் ஆகும் வாய்ப்பு கிடைத்தது, அதனை சரியாக பயன்படுத்தி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் விறுவிறுவென அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வந்து விட்டார்.

vijay sethupathi

இதையும் படியுங்களேன் எங்க வண்டிய திருடிட்டாங்க., பார்த்த சொல்லுங்க.! விரக்தியில் மணிமேகலை.! ஆறுதல் கூறும் CWC நண்பர்கள்.!

இவர் அண்மையில் தனது திரைப் பயணத்தை பற்றி கூறுகையில் “எனக்கு பத்து லட்சம் ரூபாய் கடன் இருந்தது . அதனை, அடைப்பதற்கு துபாய் சென்று வேலை செய்து கடனை அடைக்க முயற்சித்தேன். ஆனால், என்னால் முடியவில்லை அதன் பிறகு எப்படி பணம் சம்பாதிப்பது தெரியாமல் சரி சினிமாவுக்குள் வாய்ப்பு தேடுவோம் என்று சினிமாவுக்குள் நுழைந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும், பெரிய நடிகராக வேண்டும் என்று கனவு எல்லாம் எனக்கு கிடையாது, தெரியாத்தனமாக இந்த துறையை தேர்வு செய்தேன் மற்றபடி திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை” என தனது திரைப்பயணத்தில் மிகவும் எளிமையாக அழுத்தமாக பேசியிருந்தார் விஜய் சேதுபதி.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment