மாஸ் ஹிட் அடித்த பேய் படத்தின் நான்காம் பாகத்தில் களமிறங்கும் விஜய் சேதுபதி… அப்போ ஆர்யாவோட நிலைமை??
விஜய் சேதுபதி தற்போது வெற்றி மாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் விஜய் சேதுபதி ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்துள்ளார்.
இவை மட்டுமல்லாது “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இவ்வாறு இந்திய சினிமாவில் படு பிசியாக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தற்போது ஒரு பிரபலமான பேய் பட வரிசையில் நான்காம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற சூடான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “அரண்மனை”. இதில் சுந்தர்.சி, ஹன்சிகா, வினய், ஆண்ட்ரியா, சந்தானம் ஆகிய பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெளிவந்தபோது குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு “அரண்மனை 2” வெளியானது. இத்திரைப்படத்தையும் சுந்தர்.சியே இயக்கியிருந்தார். இதில் சுந்தர்.சி, சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படமும் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
“அரண்மனை”, “அரண்மனை 2” ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி “அரண்மனை 3” திரைப்படத்தையும் இயக்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்.சி, ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: “பிரபுதேவாவே விஜய் கிட்டத்தான் டான்ஸ் கத்துக்கனும்”… என்ன இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்…
எனினும் இத்திரைப்படம் முந்தைய பாகங்களை போல வெற்றிப்படமாக அமையவில்லை. இந்த நிலையில் “அரண்மனை” திரைப்படத்தின் நான்காம் பாகத்தை இயக்கவுள்ளாராம் சுந்தர்.சி. இத்திரைப்படத்தை விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.