விஜய்சேதுபதி சமீபகாலமாக படங்களைத் தேர்வு செய்து நடிப்பது அவரது வளர்ச்சியைக் காட்டுகிறது. ஹீரோயிசத்தை விட கதைக்கு முக்கியத்துவம் காட்டுகிறார். பீட்ஷா படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் படங்கள் அவருக்கு என்று தனி அந்தஸ்தை சினிமா உலகில் ஏற்படுத்தின. அதன்பிறகு கதை பிடித்து இருந்ததால் மாஸ்டர், விக்ரம், ஜவான் ஆகிய படங்களில் மாறுபட்ட வில்லன் ரோலில் கலக்கினார். தொடர்ந்து தனது பழைய நிலைக்கே ஹீரோவாக திரும்பினார்.
கடைசியாக அவர் நடித்த மகாராஜா படம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது. நித்திலன் சாமிநாதன் படத்தை அருமையாக இயக்கி இருந்தார். விஜய்சேதுபதிக்கு இந்தப் படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டர். அற்புதமாக நடித்து இருந்தார்.
படமும் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது. படத்தின் கதையே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாத வகையில் மிக அற்புதமாக எடுத்து இருந்தார் இயக்குனர்.
அவர் தற்போது நடித்து வரும் படம் டிரெய்ன். கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். மிஷ்கின் இசை அமைத்து இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளர் ஒரு பெண் தான். பெயர் பவுசியா பாத்திமா.
Also read: தேர்தலுக்குப் பிறகு விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கா? அதுதான் அவரோட பிளானா?
விஜய்சேதுபதி, ஐரா தயானந்த், நாசர், நரேன், சம்பத், கே.எஸ்.ரவிக்குமார், சிங்கம்புலி, பிரீத்தி, பிக்பாஸ் ஜனனி, யூகி சேது உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் பெயருக்கேற்ப முழு படப்பிடிப்புமே ரயிலில் தான் நடக்கிறது. இந்தப் படத்திற்காக கோடிகளை செலவழித்து ரயிலுக்கான செட் போட்டுள்ளார்களாம். ஜெர்மனியில் இருந்து நவீன ரக கேமராவும் வரவழைக்கப்பட்டுள்ளதாம்.
விஜய்சேதுபதியின் கேரக்டரோட பெயர் சந்திரபாபு. அவர் ஒரு ரயிலில் பயணிக்கிறார். அப்போது அவர் அங்குள்ளவர்களுடன் உரையாடுகிறார். அதன்பிறகு அவர்களது வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்குகிறார் என்பது தான் கதை.
படத்தில் சண்டைக்காட்சிகளுக்காக வியட்நாமில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளார்களாம். நாசர் மிரட்டும் வில்லனாக நடித்துள்ளார். 5 நிமிட காட்சி, ஒரே ஷாட் என நடிப்பில் அசத்தியுள்ளாராம் நாசர்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…