கைதி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி.....

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் பட்டியலில் நிச்சயம் கைதி படம் இடம்பெற்றிருக்கும். அந்த அளவிற்கு கைதி படம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் கார்த்தி தவிர நரேன், அர்ஜூன் தாஸ், தீனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக இயக்குனர் லோகேஷ் படமாக்கி இருப்பார். காட்சிகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு தத்ரூபமாக எடுத்து ரசிகர்களை சீட்டு நுனியில் அமர வைத்திருப்பார் இயக்குனர் லோகேஷ்.
அதேபோல் படத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் சிறை கைதியாக நடிகர் கார்த்தி நடித்து மிரட்டி இருப்பார். மிகவும் எதார்த்தமான நடிப்பால் பட்டையை கிளப்பி இருக்கும் கார்த்தி படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருப்பார். பல ஆண்டுகளுக்கு பின் தான் பெற்ற குழந்தையை பார்க்கப்போகும் ஒரு தந்தையாக அவரது ஏக்கத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருப்பார்.

vijay sethupathi
இந்நிலையில் கைதி படத்தில் நடிகர் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்தாராம். அந்த சமயத்தில் விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் கைதி படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதன் பின்னரே அப்படத்தில் நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகி உள்ளார்.
விஜய் சேதுபதி நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில் சமீபகாலமாகவே அவரது படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. அவரும் படங்களின் எண்ணிக்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கதைக்கு கொடுக்க தவறி வருகிறார். ஒருவேளை கைதி போன்ற படங்களை வருங்காலத்தில் தேர்வு செய்து நடித்தால் இழந்த அவரின் நற்பெயரை மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது என பலர் கூறி வருகிறார்கள்.