வில்லன் பவானிக்கு அதிகரிக்கும் டிமாண்ட்..! மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் விஜய் சேதுபதி....!

by ராம் சுதன் |
vijay sethupathi
X

ஹீரோவாக நடித்த எந்த நடிகரும் எந்த காரணத்திற்காகவும் தனது பாதையை மாற்ற மாட்டார்கள். உதாரணமாக ஒரு ஹீரோ ஏதேனும் ஒரு படத்தில் ஹீரோ அல்லாமல் வேறு ஒரு கேரக்டரில் நடித்தால் எங்கே அதன் பின்னர் அதுபோன்ற வாய்ப்புகள் மட்டுமே கிடைக்குமோ என்ற பயத்தில் யாரும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அப்படி அல்ல. இவர் மட்டும் மற்ற ஹீரோக்களில் இருந்து சற்று வித்தியாசமானவர். ஆம் இவர் ஹீரோ மட்டுமல்லாமல் வில்லன், அப்பா என எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பில் புகுந்து விளையாடுவார். அதுமட்டுமின்றி ஈகோ பார்க்காமல் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் அது என்ன கேரக்டராக இருந்தாலும் அதில் நடித்து விடுவார்.

vijay sethupathi

vijay sethupathi

அந்த வகையில் இவர் வில்லனாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர், விக்ரம் வேதா ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். உண்மையை கூற வேண்டுமானால் இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்களில் தான் இவருக்கு நல்ல பெயரும் பாராட்டும் கிடைத்தது.

தற்போது ஹீரோ விஜய் சேதுபதியை விட வில்லன் விஜய் சேதுபதிக்கு தான் நல்ல டிமாண்ட் நிலவி வருகிறது. அதன்படி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi-karthi

vijay sethupathi-karthi

இந்நிலையில் அடுத்தபடியாக குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு மோகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story