மனுசனுக்கு மச்சம்யா!.. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் குயின்......

by சிவா |
vijay sethupathi
X

தமிழில் பல படங்களில் நடித்து வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.தற்போது பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார்.

அதுவும் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால் அதுதான் உண்மை. இதுபற்றி செய்திகள் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

merry christmas

பிரபல பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் ‘Merry Christmas' என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கதீர்னா கைஃப் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.இப்படத்தை அடுத்ட்த வருடம் டிசம்பர் 23ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் நடிகர்களில் தனுஷ் மட்டுமே பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதியும் அந்த இடத்தை பிடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் உருவான 'Atrangi Re' ஹிந்தி படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story