விக்ரம் படத்தின் எதிரொலியா? கமல்- எச்.வினோத் கூட்டணியில் கைகோர்க்கும் அந்த நடிகர்?

kamal
அஜித்தை வைத்து ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் எச்.வினோத். அந்தப் படத்திற்கு பிறகு எச்.வினோத் யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற சந்தேகம் எழுந்து வந்தது. கமலுடன் கூட்டணி வைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.
இந்த நிலையில் யோகிபாபுவுடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார் என்ற பேச்சும் வந்தது. அதே சமயம் விஜய் சேதுபதியை வைத்தும் ஒரு படம் பண்ணப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்தப் படம் கமலுடன் தான் என்று முடிவாகியுள்ளது.

kamal1
ஆனால் இந்தப் படத்தில் கமலிடம் 35 நாள்கள்தான் கால்ஷீட் வாங்கியிருக்கிறாராம் வினோத். மேலும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் யோசிக்க வேண்டிய விஷயம் கமலை விட விஜய் சேதுபதியிடம்தான் வினோத் அதிக நாள்கள் கால்ஷீட் வாங்கியிருப்பதாக தெரிகிறது.
இன்னொரு பக்கம் கமல் பிரபாஸுடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்றும் கூறப்பட்டது. அதனால் இந்தியன் படத்திற்கு பிறகு அந்த தெலுங்கு படத்தில் தான் தன்னை இணைக்கப்போவதாகவும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

kamal2
இதன் காரணமாகவே வினோத் படத்தில் அதிக நாள்கள் கால்ஷீட் கொடுக்கவில்லையாம் கமல். ஒரு வேளை விஜய் சேதுபதியை மையப்படுத்தியே இந்தப் படம் அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் யோகிபாபுவும் இந்தப் படத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது. கூப்பிட்டு வச்சு கும்மி அடிக்கப் போகிறார் வினோத்.