More
Categories: Cinema News latest news

விஜய் சேதுபதியை ஓரங்கட்டிய உலக நாயகன்… ஆனால் வெளிப்பட்டதோ மக்கள் செல்வனின் பெருந்தன்மை… என்ன மனுஷன்யா!!

மக்கள் செல்வன் என போற்றப்படும் விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்மஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi

அதே போல் ஹிந்தியில் “ஃபர்சி” என்ற வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இவ்வாறு தற்போது இந்தியாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி.

Advertising
Advertising

விக்ரம்

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

Vikram Movie

இத்திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. குறிப்பாக கமல்ஹாசனின் சினிமா பயணத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

அள்ளிக்கொடுத்த கமல்

“விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார் கமல். மேலும் அத்திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதே போல் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு, விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.

Vikram Movie

இதனை தொடர்ந்து ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம், “லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் கார் வாங்கி கொடுத்தார். சூர்யாவுக்கு வாட்ச் கொடுத்தார். உங்களுக்கு என்ன கொடுத்தார்?” என கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி “அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். அதுவே பெரிய பரிசுதான்” என கூறினார்.

ஹெச்.வினோத் கூட்டணி

ஹெச்.வினோத் தற்போது “துணிவு” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி ஹெச். வினோத்துடன் கைக்கோர்க்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் “துணிவு” திரைப்படத்தின் பணிகள் முடிவதற்கு தாமதம் ஆனதால் ஹெச்.வினோத், விஜய் சேதுபதியை வைத்து இயக்க உள்ள திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 100 ஆவது திரைப்படத்தில் ஃப்ளாப் கொடுத்த டாப் நடிகர்கள்… எல்லாம் நேரம்தான் போல…  

H.Vinoth

மேலும் ஹெச்.வினோத் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி. இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

விஜய் சேதுபதியின் பெருந்தன்மை

Vijay Sethupathi

இந்த நிலையில் இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் “விக்ரம் படத்தின் வெற்றிவிழாவில் விஜய் சேதுபதிக்கு கமல்ஹாசன் அவ்வளவாக கிரெடிட் தரவில்லை. அப்படி இருந்தும் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். சில நேரங்களில் விஜய் சேதுபதி பெரிய மனிதனாக தென்படுகிறார்” என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts