’தலைவன் தலைவி’ டைட்டிலே தாறுமாறா இருக்கே!.. மகாராஜாவுக்கு அடித்த ஜாக்பாட்!.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் நித்தியா மேனனுடன் நடித்து வரும் படத்தின் அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்து 2024-ல் வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சீனா வரை வெளியாகி, உலகளவில் பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்திற்காக விஜய் சேதுபதி சில விருது விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். விருது வாங்கியபோது, "மகாராஜா தன்னை மீண்டும் உயர்த்தியது" என உணர்ச்சிபூர்வமாக கூறியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 7 சீசன்களிலும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வந்த நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். இடையில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிம்புவை வைத்து தொகுத்து வழங்க முயன்ற போது வெகுவாக ரசிகர்களை கவரவில்லை. விஜய் சேதுபதியின் இயல்பான பேச்சும், நகைச்சுவையும் பார்வையாளர்களை கவர்ந்தன.

பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் வெளியாக உள்ள VJS 52 படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அப்படத்திற்கு 'தலைவன் தலைவி' எனp பெயரிடப்பட்டு டீசரையும் வெளியிட்டுள்ளனர். டீசரில் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் கணவன் மனைவியாக சண்டைப் போடும் காட்சி பார்ப்பதற்கு ரசிக்கும் விதமாக உள்ளது. மேலும், யோகி பாபு அவர்களை நார்மல் பீப்பிள் கிடையாது என கிண்டலாக பேசியிருப்பதும் நகைச்சுவை நிறைந்த குடும்பப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரேயின் திரைப்படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நடித்துள்ள ஏஸ் திரைப்படமும் விரைவில் திரைக்கு வருகிறது.