விஜய் சேதுபதியுடன் இணையும் வடிவேலு… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…
விஜய் சேதுபதி தற்போது “விடுதலை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்த “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி ஹிந்தியில் “காந்தி டாக்ஸ்”, “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார்.
இவ்வாறு படு பிசியாக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். ஆறுமுக குமார் இதற்கு முன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஆறுமுக குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். கூடிய விரைவில் விஜய் சேதுபதியும் வடிவேலுவும் இணையும் ஒரு புதிய திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடிவேலு தற்போது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் “மாமன்னன்” திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.