இந்தி படத்துல ஏன் நடிக்கிறீங்க!.. வந்து விழந்த கேள்வி.. பத்திரிகையாளரிடம் எகிறிய விஜய் சேதுபதி!

இந்தி தெரியாது போடா என தமிழ்நாட்டில் முழக்கங்கள் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தி படத்துல ஏன் நடிக்கிறீங்க என விஜய் சேதுபதி இந்தியில் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதும் ஆத்திரப்பட்ட விஜய் சேதுபதி அந்த பத்திரிகையாளர் மீது எகிறியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் ஓடி வருகின்றன. ஆனால், ஹீரோவாக அவர் நடித்த சில படங்கள் சொதப்ப ஆரம்பித்த நிலையில், பாலிவுட்டுக்கு கிளம்பிச் சென்று விட்டார்.
இதையும் படிங்க: ஓடாத படத்தை ஓடிடியில் பார்த்து கேஸ் போட்ட ராம பக்தர்கள்!.. நயன்தாராவுக்கு எல்லா சைடுலயும் அடி விழுது!
மும்பைக்கார், ஜவான், ஃபர்ஸி வெப்சீரிஸ் தொடர்ந்து தற்போது மெரி கிறிஸ்துமஸ் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் விஜய் சேதுபதி. கத்ரீனா கைஃப்புக்கு ஜோடியாக ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அப்போது இந்தி சினிமாவில் மரியாதை கிடைக்கிறதா? என்கிற கேள்விக்கு நல்லாவே மரியாதை கொடுக்கிறாங்க என பதில் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த ரகசியம் பற்றி யாருக்காவது தெரியுமா? வசமாக மாட்டிக் கொண்ட சம்பவம்
ஆனால், இந்தி படத்தில் ஏன் நடிக்கிறீங்க ஒரு தமிழராக இருந்துக் கொண்டு இந்தி படத்தில் நடிப்பது தவறு இல்லையா என ஒரு பத்திரிகையாளர் டார்கெட் பண்ணும் போது கடுப்பான விஜய் சேதுபதி இந்தி படிக்கக் கூடாதுன்னு இங்கே யாரும் சொல்லல இந்தி திணிக்கக் கூடாதுன்னு தான் சொல்றாங்க, உங்க கேள்வியே தப்பு எப்போ பார்த்தாலும் இதைத்தான் நீ கேட்குற, அமீர் கான் வந்த போது கூட இதே கேள்வியத்தானே கேட்ட என டென்ஷன் ஆகி சத்தம் போட்டதும் அவசர அவசரமாக அந்த பிரஸ் மீட் முடிவடைந்தது.