Categories: latest news

ஹீரோவா நடிச்சா கம்மிதான்!.. வில்லனா கோடிகளை அள்ளும் விஜய் சேதுபதி!..

சிறந்த, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் இயல்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களைப் போல பன்ச் வசனம் பேசாமல், பந்தா காட்டாமல், 10 பேரை அடித்து பறக்க விடும் ஹீரோயிசம் செய்யாமல் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். இன்னும் சொல்லப்போனால் அதனால்தான் விஜய் சேதுபதியை பலருக்கும் பிடித்துப் போனது.

துவக்கம் முதலே எந்த இமேஜுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் சாதாரண, இயல்பான மனிதர் என்கிற கதாபாத்திரத்திலேயே விஜய் சேதுபதி தொடர்ந்து நடித்து வந்தார். ஆனாலும் சினிமா உலகம் அவரை அப்படியே விட்டுவிடவில்லை. அவரையும் வழக்கமான ஹீரோ பாணிக்கு மாற்றியது. சில இயக்குனர்கள் ஹீரோயிசம் கொண்ட படங்களை அவரை வைத்து எடுத்தார்கள்.

அதேநேரம் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கேமியோ, சின்ன கதாபாத்திரம், வில்லன் என பல அவதாரங்களையும் எடுத்தார் விஜய் சேதுபதி. மாஸ்டர், விக்ரம், ஷாருக்கான் நடித்த ஜவான் போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். இந்த மூன்று படங்களுமே வெற்றி படங்கள்தான்.
அதேநேரம் திடீரென மகாராஜா போன்ற ஒரு படத்தை கொடுத்து ஆச்சரியம் கொடுத்தார். இந்த படம் நல்ல வசூலை பெற்றதோடு சீன மொழியிலும் டப் செய்து வெளியாகி வரவேற்பை பெற்றது.

மகாராஜா படம் வரை 15 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி அந்த படத்திற்கு பின் தனது சம்பளத்தை 20 கோடியாக உயர்த்தினார். தற்போது தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா ரவுடி ஜனார்தன் என்கிற ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை புக் செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு 20 கோடி சம்பளம் பேசி இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓடாத நிலையில் வில்லனாக நடித்து கல்லா கட்ட துவங்கிவிட்டார் என்கிறது திரையுலகம்.

Published by
சிவா