More
Categories: Cinema News latest news

லியோ படத்தில் விஜய் சேதுபதி இருக்காரா? போஸ்டரில் சிக்கிய விஷயம்…

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. லியோ திரைப்படத்திற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. கைதி,விக்ரம்  என அனைத்து படங்களும் ஹிட் கொடுத்ததால் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மாஸ்டர் என்னும் வெற்றி படத்தை கொடுத்துள்ளனர் லியோ திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் பொழுதும் அது மக்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி பெரும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertising
Advertising

vijay leo 1

காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பொழுது அங்கு வேலையாட்கள் பட்ட கஷ்டங்களை ஒரு வீடியோவாக வெளியிட்டனர். அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்சமயம் விஜய் பாடிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதோடு லியோ படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது.

லியோவில் விஜய் சேதுபதி:

தற்சமயம் அந்த படத்தின் போஸ்டரை கொண்டு படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். அந்த போஸ்டரில் சுத்தியலால் விஜய் அடித்து இரண்டு பற்கள் பறப்பதாக போஸ்டர் உள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு தங்கப்பற்கள் இருப்பதை படத்தில் பார்த்திருப்போம். இந்த திரைப்படம் விக்ரம் படத்திற்கு முந்தைய கதை, இது லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வரும் கதைதான் என்று கூறப்படுகிறது.

எனவே விஜய் சேதுபதியின் இரண்டு பற்களை விஜய் உடைத்ததால் அதற்குப் பிறகு அவர் தங்கப்பதற்களை மாட்டி அந்த கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தில் வந்திருக்கலாம் என்று கூறுகிறார் பத்திரிகையாளர் செய்யாறு பாலு. எனவே விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இந்த படத்தில் இருக்குமா? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஒரு பிரச்சினையா? சாவித்திரி – சரோஜாதேவிக்கு இடையே நடந்தது என்ன?

 

Published by
Rajkumar

Recent Posts