போதும்டா சாமி!..இனிமே அப்படி நடிக்கவே மட்டேன்!...இந்த தெளிவு முன்னயே வந்திருக்கணும் விஜய் சேதுபதி.....
கடந்த சில வருடங்களாகவே, ஒவ்வொரு வருடமும் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகர் யார் என கணக்கெடுத்தால் அதில் விஜய் சேதுபதி மட்டுமே இருப்பார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் நடிப்பில் ஒரு படம் வெளியாகும் நிலையே வந்தது. இதை பலரும் சமூகவலைத்தளங்களில் கிண்டலடிக்கும் அளவு சென்றது.
ஹீரோ மட்டும் என்றில்லால், தனது நண்பர்கள் இயக்கும் படங்களில் 'கேமியோ ரோல்' எனக்கூறப்படும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து கொடுப்பார் விஜய் சேதுபதி. தான் கஷ்டப்பட்டு மேலே வந்ததால் தன்னால் ஒருவருக்கு வாழ்க்கை கிடைத்தால் அதில் மகிழ்ச்சி என நினைத்துதான் அப்படி நடித்து கொடுத்தார் விஜய் சேதுபதி. ஒருகட்டத்தில் இதுவே அவருக்கு பிரச்சனையையும் கொண்டு வந்தது.
விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் எனவும், போஸ்டரில் அவரின் புகைப்படத்தை பெரிதாக போட்டு விளம்பரம் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தனர். ஆனால், அவர் ஒரு சிறிய வேடத்தில் சில நேரம் மட்டுமே வருவார். இது ரசிகர்களுக்கும் அதிருப்தியை கொடுத்தது. தற்போதும் விஜய் சேதுபதி கையில் அது போல் ஒரு டஜன் திரைப்படங்கள் இருக்கிறதாம்.
ஆனால், இனிமேல் அதுபோன்று சிறிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டாம் என்கிற முடிவுக்கு விஜய் சேதுபதி வந்துள்ளாராம். கையில் இருக்கும் படங்களை மட்டும் நடித்துகொடுத்துவிட்டு. இனிமேல் ஹீரோ மற்றும் வில்லன் போன்ற முக்கிய வேடத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி..
இது அவரின் நட்பு வட்டார இயக்குனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்...