Connect with us

தமிழுக்கு நோ…ஒன்லி ஹிந்திதான்…இனி அந்த நடிகரின் மார்க்கெட் எங்கேயோ போயிடும் போலயே…!

vijay sethupathi

Cinema News

தமிழுக்கு நோ…ஒன்லி ஹிந்திதான்…இனி அந்த நடிகரின் மார்க்கெட் எங்கேயோ போயிடும் போலயே…!

என்னதான் திறமை இருந்தாலும், தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், அப்படியே வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும் தென்னிந்திய நடிகர்களிடம் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது.

vijay sethupathi

இப்படி உள்ள நிலையில் தமிழ் நடிகர் ஒருவர் தற்போது அடுத்தடுத்து 5 பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த நடிகர் வேறு யாருமல்ல தமிழில் நடிப்புக்கு பெயர் போன மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். இவரது எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டை பெற்றுள்ளது.

ஆனால் சமீபகாலமாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி அடைந்ததால், கடும் விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் தான் சமீபத்தில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ஓரளவிற்கு ரசிகர்களை கவர்ந்தது என்று கூறலாம்.

vijay sethupathi

என்னதான் விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் சேதுபதி மார்க்கெட் என்னவோ குறையாமல் தான் உள்ளது போல. ஆமாங்க மனுஷன் கைவசம் இப்போ ஐந்து ஹிந்தி படங்கள் உள்ளதாம். அதன்படி அவர் ஏற்கனவே சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் பேமிலி மேன் இயக்குனர்களின் ஃபார்ஸி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மேலும் இரண்டு புதிய ஹிந்தி பட வாய்ப்புகள் வந்துள்ளதாம். இதனால் பயங்கர குஷியில் உள்ளாராம்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top