பொண்ணுங்க இருந்தா கிக்கா இருக்கும்...! பகிரங்கமா சொன்ன விஜய் சேதுபதி...

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இவர் தான் அடுத்ததாக அஜித் படத்தை இயக்க உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கு இந்த படம். வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் கதை எதும் தெரியாமல் தான் விஜய் சேதுபதி இருந்தாராம்.
விக்னேஷ் சிவனுக்காக மட்டும் தான் ஒப்புக்கொண்டேன் எனக் கூறினார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார். அதில் நிரூபர் ஒருவர் இரண்டு பெண்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மாதிரியான கதை தான் இந்த படம்.
உண்மையில் செட்டில் எப்படி இருந்தது என கேட்டனர். அதற்கு விஜய் சேதுபதி பொண்ணுங்க இல்லைன்னா அது ஒரு மாதிரி இருக்கும். முழுவதும் ஆண்களே இருக்கும் இடத்தில் ரெண்டு பொண்ணுங்க இருந்தா அது ஒரு மாதிரி மஜாவா இருக்கும். அந்த ஃபீலே வேற மாதிரி இருக்கும் எனக் கூறினார்.