’விக்ரம்’ படத்தின் சூடுபிடித்த காட்சி...! விஜய் சேதுபதி மறுத்தும் துணிந்து இறங்கிய லோகேஷ்...

கமல் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் , நரேன் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் கேமியோ ரோலில் அனைவரையும் தின்று சாப்பிட்டிருப்பார் நடிகர் சூர்யா.
படம் வெளியாகி கோடி கணக்கில் வசுலை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் கமல் 4 வருடங்கள் கழித்து திரையில் தோன்றுவது மற்றொரு சிறப்பு. இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் படத்தின் இடையிடையே ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களை திணற வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ்.
இந்த படத்தில் பிராத்தல் தொழில் செய்யும் ஒரு பெண்ணை கமல் போய் சந்திப்பது பின் பகத் போய் சந்திப்பது போன்ற காட்சிகள் இடம் பெறும். இந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன் அவரது கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்திருப்பார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முதலில் இந்த காட்சியை பார்க்கும் போது சங்கடமாக தான் இருக்கும். ஆனாலும் அதிலயும் ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தார் லோகேஷ்.
இந்த காட்சியில் நடித்த மாயாவிற்கு சமீபத்தில் விஜய் சேதுபதி போன் பண்ணி பேசியதாக அவரே கூறினார். அவர் கூறும் போது முதலில் விஜய் சேதுபதிக்கு இந்த காட்சியை படிக்கும் போது சங்கடமாக தான் இருந்ததாம். கமல் சார் படம் அதுவும் குடும்பமாக வந்து பார்ப்பார்கள். அதனால் இந்த காட்சி வேணுமா என்று லோகேஷிடன் கூறினாராம். ஆனால் லோகேஷ் விடுங்கள் பார்த்துக் கொள்ளலாம் என கூறி தற்பொழுது அந்த சீன் தான் அதிகளவு பகிரப்படுகிறது.