என்னை பாத்தாலே விஜய் சேதுபதி பயப்படுவாரு...! இயக்குனரிடம் கால்ஷீட் கொடுக்க மறுத்த மக்கள் செல்வன்...
தமிழ் சினிமாவில் துணை நடிகராக நடிக்க வந்து தன்னுடைய விடாமுயற்சியால இன்று முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சின்ன சின்ன ரோல்களில் நடித்து தன்னுடைய முகத்தை ஓரமாக காட்டிய தருணங்களையும் அனுபவித்துள்ளார். புதுப்பேட்டை சரவணா படத்தில் தனுஷ் பின்னாடி நின்று கொண்டிருப்பார்.
தனுஷே எதிர்பார்த்திருக்க மாட்டார் விஜய் சேதுபதி இந்த நிலைமைக்கு வருவார் என்று. ஏகப்பட்ட வெற்றிபடங்களை கொடுத்த விஜய் சேதுபதி சில தோல்விகளையும் எதிர்கொண்டுள்ளார். அப்படி வந்த ஒரு படம் தான் வன்மம். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர் கிருஷ்ணாவும் நடித்திருப்பார்.
வன்மம் திரைப்படத்தை இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது. அந்த படத்தை பற்றியும் தோல்விக்கான காரணங்கள் பற்றியும் சமீபத்தில் அந்த இயக்குனர் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அவர் கூறும்போது படம் தோல்விக்கு நான் தான் காரணம். மற்றபடி நடிகர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்தார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் விஜய் சேதுபதி என்னை பார்த்தாலே பயப்படுவார். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் செய்கிறேன், ஆனால் கால்ஷீட் மட்டும் கேட்காதீர்கள் என்று கூறுவாராம். ஒரு வேளை படம் தோல்வியடைந்ததை மனதில் வைத்து கொண்டு பேசுகிறாரோ தெரியவில்லை. ஆனாலும் அவருக்கு ஏகப்பட்ட தேதிகளில் கமிட் ஆகியிருப்பதால் இப்படி கூறுவார் என்று ஜெய்கிருஷ்ணன் கூறினார்.