விஜய் சேதுபதிக்கு மார்க்கெட்டே இல்லை...எங்களுக்கு வேணாம்!..கிரேட் எஸ்கேப் ஆன சன் பிக்சர்ஸ்…
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் ஜனவரி மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.
மேலும் விஜய் சேதுபதி ஹிந்தியில் “மும்பைக்கார்”, “காந்தி டாக்ஸ்”, “மெர்ரி கிருஸ்மஸ்”, “ஜவான்” போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இவ்வாறு படு பிசியாக வலம் வரும் விஜய் சேதுபதி, பொன் ராம் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என அறிவிக்கப்படிருந்தது. மேலும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதன் படி இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. “டி எஸ் பி” என்று இத்திரைப்படத்திற்கு டைட்டில் வைத்திருக்கின்றனர்.
இதில் விஜய் சேதுபதி போலீஸாக நடிக்கிறார். போஸ்டரில் போலீஸ் உடையில் மிகவும் அட்டகாசமாக தென்படுகிறார் விஜய் சேதுபதி. ஆனால் “டி எஸ் பி” திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ்ஜின் “ஸ்டோன் பெஞ்ச்” நிறுவனம் தயாரித்துள்ளதாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு பிஸ்மி, தனது வீடியோவில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது “சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில்தான் “டி எஸ் பி” திரைப்படம் உருவானது. எப்போதும் சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் நேரடியாக ஒரு திரைப்படத்தை தயாரிக்காது. வேறு ஒரு தயாரிப்பாளரிடம் கொடுத்துதான் அத்திரைப்படத்தை உருவாக்குவார்கள்.
இதையும் படிங்க: “ரஜினியை அடிக்க நான் ரெடி…” தயங்கிய நடிகர்களிடையே ஆவலோடு கை தூக்கிய நாசர்…
அதே போல்தான் “டி எஸ் பி” திரைப்படத்தையும் கார்த்திக் சுப்புராஜ்ஜிடம் கொடுத்து உருவாக்கினார்கள். ஆனால் இதற்கு முன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த “எதற்கும் துணிந்தவன்”, “பீஸ்ட்” போன்ற திரைப்படங்கள் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஹீரோவுக்கான மார்க்கெட் இல்லை என தெரியவருகிறது. அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவர் வில்லனாக நடித்தால்தான் அத்திரைப்படம் பெரிதாக பேசப்படுகிறது. ஆதலால் விஜய் சேதுபதிக்கான ஹீரோ மார்க்கெட் இப்போது சரிந்துள்ளது. இந்த காரணத்தால்தான் “டி எஸ் பி” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்புராஜ்ஜிடமே கொடுத்துவிட்டது” என பிஸ்மி கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த “மாமனிதன்” திரைப்படம் கைக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.