லியோ படத்தில் இவர் நடிக்கிறாரா?... வதந்தியை கிளப்பிவிட்ட லோகேஷ் கனகராஜின் உயிர் நண்பர்…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், அர்ஜூன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ போன்ற பலரும் நடிக்கின்றனர். இத்தகவல்கள் எல்லாம் ரசிகர்கள் ஏற்கனவே அறிந்தவையே.
இதனை தொடர்ந்து “லியோ” திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் வருவதாக பல பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. ஆதலால் இத்திரைப்படத்தில் “விக்ரம்” படத்தில் நடித்த கமல்ஹாசன், சூர்யா ஆகியோர் கேமியோ ரோலில் இடம்பெறுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் வசன கர்த்தாவாகவும் லோகேஷ் கனகராஜ்ஜின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்து வரும் ரத்னகுமார், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அதில் “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருந்த சந்தனம் கதாப்பாத்திரம் அணிந்திருந்த உடைந்த கூலிங் கிளாஸை கையில் பிடித்தவாறு “Never say die” என்ற கேப்ஷனை கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “லியோ” படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்றவாறு செய்திகளை பரப்பத்தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, தனது வீடியோ ஒன்றில் இது குறித்து ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். அதாவது “லியோ” படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை எனவும், அது வெறும் வதந்தி எனவும் இந்த வதந்திக்கு ரத்னகுமார் வெளியிட்ட புகைப்படம்தான் காரணம் எனவும் அதில் கூறியிருக்கிறார். மேலும் படக்குழுவினரே சென்ஷேசனுக்காக இவ்வாறு வதந்திகளை கிளப்பிவிடுகிறார்கள் என்று குற்றமும் சாட்டியிருக்கிறார்.
இதையும் படிங்க: பாரதிராஜா எடுத்த ஃப்ளாப் படத்தை பிளான் பண்ணி ஓட வைத்த எம்.ஜி.ஆர்… இதெல்லாம் எப்படி யோசிக்கிறாங்களோ?