இசையமைப்பாளராக களமிறங்கும் விஜய் சேதுபதி… கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருக்கு!!

Vijay Sethupathi
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, தற்போது தமிழில் “விடுதலை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில்”மேரி கிரிஸ்மஸ்”, “மும்பைக்கார்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Vijay Sethupathi
இதனை தொடர்ந்து “காந்தி டாக்ஸ்” என்ற மௌனத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் “ஃபர்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்து வருகிறார். இவ்வாறு படுபிசியாக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்தது.
ஆறுமுக குமார் இதற்கு முன் விஜய் சேதுபதியை வைத்து “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஆறுமுகக்குமார் விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம்.

Vijay Sethupathi
இந்த நிலையில் ஆறுமுக குமார் இயக்கும் புதிய திரைப்படம் குறித்த ஒரு ஆச்சரியத்தக்க தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளாராம்.
விஜய் சேதுபதி சமீப காலமாக இசையின் மீது மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாராம். மேலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இசை பயின்றும் வருகிறாராம். இந்த நிலையில் விஜய் சேதுபதி, ஆறுமுக குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார் என கூறப்படுகிறது. இத்தகவலை பிரபல பத்திரிக்கையாளர் சி.சக்திவேல் வலைபேச்சு வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Vijay Sethupathi
இதற்கு முன் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் ஜெய் ஆகியோர் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்துதான் தற்போது விஜய் சேதுபதி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என தகவல் வெளிவருகிறது. இதனை கேள்விபட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.