ஒத்தையா நின்னு ஆட முடியாது என்பதை உணர்ந்த விஜய்சேதுபதி!.. அடுத்து வெளியான அதிரடியான தகவல்...
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக அறியப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி. எதார்த்தமாக வாழ்வியலுக்கு ஏற்றப் படி நடிப்பதில் சிறந்த நடிகர். ஆரம்பத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்து வந்த விஜய்சேதுபதிக்கு கைகொடுத்தது ‘பீஸ்ஸா’ படம் தான்.
தொடர்ந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்ட பாலகுமாரா’ போன்ற படங்கள் இவரை அப்படியே தூக்கி நிறுத்தியது. அதன் பின் பல பட வாய்ப்புகள் வர ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ‘சேதுபதி’ படத்தில் தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொண்டார்.சேதுபதி படத்தின் வெற்றி பல தயாரிப்பாளர்களை இவரை தேடி வரவழைத்தது.
அந்த நூலை அப்படியே பிடித்துக் கொண்டு நகர்ந்திருந்தால் கூட இன்னும் நல்ல நல்ல கதைகளை உடைய படங்கள்
அவரை தேடி வந்திருக்கும். ஆனால் வில்லனாக நடித்து அதன் மூலம் கிடைத்த பெருமை மீண்டும் வில்லனாக நடிக்க ஆர்வத்தை தூண்டியது. மாஸ்டர், விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின் வெளியான விஜய்சேதுபதியின் படங்கள் ஓடவில்லை.
மேலும் ஹிந்தியிலும் படுபிஸியாக இருக்கிறார் என்றாலும் அங்கேயும் அவரின் பாட்ஷா பலிக்க வில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மார்கெட் அவ்ளோதான். இன்னும் அவரால முன்பு மாதிரியான ஒரு ஹிட் படங்களை கொடுக்கவே முடியாது என்றெல்லாம் கோலிவுட்டில் பேசிவருகிறார்கள்.
அதற்கேற்றாற் போல விஜய் சேதுபதியும் தானாகவே போய் விக்னேஷ் சிவனிடம் கால்ஷீட் தருவதாகவும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் ஹிந்தியில் ஒரு படம் பண்ண இருக்கிறாராம். கடைசியாக சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியிருந்தார். இதனை தொடர்ந்து பாலிவுட்டில் ஒரு படம் பண்ணப் போகிறாராம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியும் நடிகர் அபிஷேக் பச்சனும் தயாராக இருப்பதாக சில பாலிவுட் தகவல்கள் கூறிவருகின்றனர். இதிலிருந்து விஜய் சேதுபதி இனிமே மல்டி ஸ்டார் படங்களில் மட்டுமே தலை காட்டுவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ரேஸ் குதிரையாக சினிமாவுக்குள் நுழைந்த பிரசாந்த்… ஜாக்பாட் அடித்து சம்பாதித்த நபர்கள்… அடேங்கப்பா!