Categories: latest news

காத்துவாக்குல அலையுது விஜய் சேதுபதியின் இரண்டு காதல்.! விஜயின் கையில் ரிலீஸ் தேதி.!

நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா என இரு முன்னணி ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரெடியாக உள்ளது. இப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்பட ரிலீஸ் காதலர் தினத்தை ஒட்டி பிளான் செய்யப்பட்டது. ஆனால், படத்தின் ரிலீஸ், சில காரணங்களால் தற்போது ஏப்ரல் என இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் – அந்த தெரு எத்தனை கோடினு கேளு.! உச்சாணி கொம்பில் தியேட்டர் ஓனர்கள்.!

அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் இருக்கும் என கூறப்படுகிறது.

ஏனென்றால், விஜய் படத்துடன் மோதுவதற்கு லலித்திற்கு இஷ்டமில்லையாம். (அடுத்த பட கால்ஷீட் வேண்டுமா இல்லையா?) அதனால் பீஸ்ட் ஏப்ரல் 14 என்றால் KVRK திரைப்படம் ஏப்ரல் 28. பீஸ்ட் 28 என்றால் KVRK ஏப்ரல் 14 என முடிவு செய்து வைத்துள்ளாராம் மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் குமார்.

Published by
Manikandan