Connect with us

விஜய் சேதுபதி இருக்குற நிலைமைக்கு எது சொன்னாலும் ஓகே சொல்லிருவார் போல.!

Cinema News

விஜய் சேதுபதி இருக்குற நிலைமைக்கு எது சொன்னாலும் ஓகே சொல்லிருவார் போல.!

கொரோனாவிற்கு முன்னர் விஜய் சேதுபதி திரைப்படம் என்றால் வாரம் ஒரு திரைப்படம் அல்லது குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு திரைப்படமாக திரைக்கு வந்துவிடும். அந்த திரைப்படமும் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்றபடி அமைந்துவிடும். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே பெரிய வெற்றியை பெரும். மற்ற திரைப்படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் கடந்து விடும்.

அதன் பிறகு ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்தார். மேலும் தெலுங்கிலும் வில்லனாக களமிறங்கினார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் ஆகிய இரண்டு படங்களை அடுத்து கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சொல்லிக்கொள்ளும்படி எந்த திரைப்படமும் விஜய் சேதுபதிக்கு இல்லை என்றே கூற வேண்டும்.

இதற்கிடையில் இயக்குனர் மிஷ்கின் விஜய் சேதுபதிக்கு ஒரு நான்கு கதை கூறியுள்ளாராம். அந்த 4 கதையையும் கேட்ட விஜய் சேதுபதி அவர் கூறிய 4 கதையுமே நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டாராம்.

மேலும் அந்த கதையை தனது வீட்டாரிடமும் கூறி அவர்களும் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டார்களாம். இதனை மிஸ்கின் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். நான் எந்த கதை கூறினாலும் அவன் ஓகே சொல்லி விடுகிறான் என விஜய் சேதுபதியை பற்றி குறிப்பிட்டார்.

இதையும் படியுங்களேன் – ரகசியமாக நடந்து முடிந்தது தளபதி66 பூஜை.! தெரிந்திருந்தால் திருவிழாவாக இருந்திருக்கும்.!

உண்மையில் தற்போது விஜய்சேதுபதிக்கு மிஷ்கின் போல ஒரு இயக்குனர் இயக்கி அதை பெரிய வெற்றி பெற வைக்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் பழைய ஹீரோ விஜய் சேதுபதியை ரசிகர்கள் திரையில் பார்ப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த குறையை காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அமைக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top