
Cinema News
8 நாளு ஃபுல்லா ’தண்ணி’தான்…! அந்த படத்துக்காக விஜய் சேதுபதி செய்த அக்கப்போரு…!
தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பிற்கு அழகு முக்கியமில்லை என்பதை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்துக் கொண்டு வருகிறார்.
மேலும் கதையை விரும்பி தேர்ந்தெடுக்கும் முறை இவரிடம் சற்று வித்தியாசமாகவே உள்ளது. நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என எண்ணும் எண்ணமுடையவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். கதையை மட்டுமே நம்பி சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் ’நானும் ரௌடிதான்’. இந்த படத்தின் கதையை விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியிடம் கூறியபோது அவர் முதலில் ஒத்துக் கொள்ளவில்லையாம். இந்த படத்திற்கு என்னுடைய கனமான உடம்பு செட் ஆகாது என விஜய் சேதுபதியே நிறைய நடிகர்களை சிபாரிசு பண்ணியுள்ளார்.
ஆனால் அவர்களெல்லாம் இந்த படத்தில் நடிக்க முன்வரவில்லையாம். உடனே விக்னேஷ் சிவனின் அன்பால் இந்த படத்திற்காக தன்னுடைய உடம்பை குறைத்துள்ளார். அதற்காக 8 நாள்கள் சுத்தமாக சாப்பிடவில்லையாம். அதற்கு பதிலாக தண்ணீர் மட்டுமே குடித்ததாக கூறினார். சாப்பிடாமல் இருந்தது தப்பா சரியா என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த படத்திற்கு அப்பொழுது தேவைப்பட்டது என கூறினார்.