முன்னணி நடிகர்களால் முடியாததை சாதித்து காட்டிய விஜய் சேதுபதி.... அப்படி என்ன செய்தார் தெரியுமா?
கோலிவுட்டில் அதிக படங்களை கைவசம் வைத்து மிகவும் பிசியாக வலம் வரும் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும் தான். டஜன் கணக்கில் படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி பல படங்கள் வெளியாகாமல் முடங்கி கிடக்கின்றன. அவற்றில் ஒன்று தான் மாமனிதன்.
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சீனு ராமசாமியும், நடிகர் விஜய் சேதுபதியும் கூட்டணி அமைத்துள்ள படம் தான் மாமனிதன். எப்போதோ வெளியாக வேண்டிய இப்படம் தற்போது தான் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ள விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள மாமனிதன் படத்தின் டீசர் நேற்று வெளியானது. மதங்களைவிட மனிதம் தான் முக்கியம் என்பதை உணர்த்தும் விதமாக டீசர் உள்ளது.
மேலும் இப்படத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை.
இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பணியாற்ற வைத்த பெருமை விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமியையே சேரும். இதுதவிர யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். மாமனிதன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.